இடுகை இடப்பட்ட நாள்:
11 NOV 2026 7:57PM by PIB Chennai
இந்தியக் கடற்படையும் ஓமன் நாட்டுக் கடற்படையும் இணைந்து, 'நசீம் அல் பஹ்ர்' என்ற இருதரப்பு கடல்சார் பயிற்சியின் 15-வது பதிப்பை நடத்தின. இரு கடற்படைகளுக்கு இடையிலான செயல்பாட்டு ஒருங்கிணைப்பை மேம்படுத்துவதையும், தொழில்முறை ஒத்துழைப்பை வலுப்படுத்துவதையும், பரஸ்பர புரிதலை ஊக்குவிப்பதையும் இந்த நிகழ்வு நோக்கமாகக் கொண்டிருந்தது.
இந்தப் பயிற்சி, இந்தியாவிற்கும் ஓமனுக்கும் இடையிலான நெருக்கமான கடல்சார் கூட்டாண்மையையும், கடல்சார் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதில் இரு நாட்டு கடற்படைகளின் கூட்டு அர்ப்பணிப்பையும் பிரதிபலிக்கிறது. பிராந்திய கடல்சார் நட்பு நாடுகளுடன் இந்தியக் கடற்படை கொண்டுள்ள ஈடுபாட்டை வலுப்படுத்தி, இந்திய அரசின் 'மகாசாகர்' தொலைநோக்குப் பார்வையை முன்னெடுத்துச் செல்லவும் இந்தப் பயிற்சி உதவுகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2335193®=48&lang=2
***
SK/RB/RJ