சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்
இடுகை இடப்பட்ட நாள்:
11 NOV 2026 4:33PM by PIB Chennai
நெடுஞ்சாலைப் பயனாளிகளிடம் தவறாக நடந்துகொண்ட தில்லி பிஜ்வாசன் சுங்கக் கட்டண வசூல் முகமைக்கு ஒரு மாத கால தடை விதித்து தேசிய நெடுஞ்சாலை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. பிஜ்வாசன் நெடுஞ்சாலையில் உள்ள இந்தச் சுங்கச் சாவடியில் பணியாற்றும் ஊழியர்கள், சாலைப் பயனாளிகளிடம் தவறாக நடந்துகொண்ட சம்பத்தைத் தொடர்ந்து தேசிய நெடுஞ்சாலை ஆணையம் கடும் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
இதன்படி, சுங்கக் கட்டணம் வசூல் செய்யும் முகமையான ரித்தி-சித்தி அசோஷியேட்ஸ் நிறுவனம் சுங்கக் கட்டணம் வசூல் செய்வது தொடர்பான ஒப்பந்தப் புள்ளியில் பங்கேற்பதிலிருந்து ஒரு மாத காலத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், அந்த முகமைக்கு ரூ.15 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இம்மாதம் 14-ம் தேதி முதல் இந்தச் சுங்கச் சாவடியின் கட்டண வசூல் நடைமுறைகளை புதிய முகமையிடம் ஒப்படைக்குமாறும் அந்த நிறுவனத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தேசிய நெடுஞ்சாலைகளைப் பயன்படுத்தும் அனைவருக்கும் பாதுகாப்பான சுமூகமான பயண அனுபவத்தை உறுதி செய்யும் வகையில் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. சுங்கச் சாவடிகளில் தவறான நடத்தை அல்லது ஒழுங்கீணங்களை ஒருபோதும் சகித்துக்கொள்ள முடியாது என்ற உறுதியான கொள்கையை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் கடைப்பிடித்து வருகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2335052®=3&lang=1
****
SK/SV/GS/RJ