இடுகை இடப்பட்ட நாள்:
11 NOV 2026 3:21PM by PIB Chennai
பிரிக்ஸ் நிலையான வாழ்க்கைமுறை வாரம் 2026 நவம்பர் 1 முதல் 7 வரை கடைப்பிடிக்கப்பட்டது. இதன் ஒரு பகுதியாக மத்திய மின்துறை அமைச்சகத்தின் எரிசக்தி திறன் அமைப்பு சார்பில் எரிசக்தி சேமிப்பு என்ற தலைப்பில் நவம்பர் 2 அன்று இணையவழிக் கருத்தரங்கம் நடைபெற்றது. நிலையான வளர்ச்சியை மேம்படுத்துதல், எரிசக்தி நுகர்வைக் குறைத்தல், எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்தல் ஆகியவற்றுக்கு எரிசக்தி திறனின் முக்கியத்துவம் குறித்து இக்கருத்தரங்கம் எடுத்துரைத்தது. நிகழ்ச்சியில் தொடக்க உரையாற்றிய எரிசக்தி திறன் அமைப்பின் தலைமை இயக்குநர் திரு கிருஷ்ண சந்திர பனிகிரகி, பல்வேறு துறைகளில் எரிசக்தி திறன்மிக்க நடைமுறைகளைப் பின்பற்றுவதன் அவசியத்தை வலியுறுத்தினார்.
இக்கருத்தரங்கில் நாட்டின் எரிசக்தி திறன் முன்னெடுப்புகள், தொழிலகங்களில் எரிசக்தி திறனை மேம்படுத்துவதற்கான வழிமுறைகள், மின் நுகர்வைக் குறைப்பதில் தொழில்நுட்பங்களின் பங்கு ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டது. சமூக ஊடகங்கள் வாயிலாக எரிசக்தி சேமிப்பு குறித்த விழிப்புணர்வுப் பரப்புரைகளும் மேற்கொள்ளப்பட்டன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2334980®=3&lang=1
***
SK/PD/RJ