சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பொருளாதார தடைகளை கடந்து தேசிய வெளிநாட்டு உதவித்தொகை மூலம் உயர் கல்விக்கான பயணம்

இடுகை இடப்பட்ட நாள்: 11 NOV 2026 6:28PM by PIB Chennai

தேசிய வெளிநாட்டு உதவித்தொகை திட்டத்தின் கீழ் மத்திய அரசு கல்வி, சம வாய்ப்புகளுக்கான நடவடிக்கைகளுக்கு தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது. இதன் வாயிலாக தகுதியுள்ள மாணவர்கள் தங்களது அறிவு, திறன், நிபுணத்துவத்தை மேம்படுத்திக் கொண்டு நாட்டின் முன்னேற்றத்திற்கு பங்களிக்க வழிவகுக்கிறது.

மகாராஷ்ரா மாநிலத்தில் பட்டியலின வகுப்பைச் சேர்ந்த திரு ராகுல் தபாடே உயர்கல்வி பயில்வதற்கான தனது உறுதியான அர்ப்பணிப்பு உணர்வை வெளிப்படுத்தி நிதி மற்றும் சமூக ரீதியான சவால்களை எதிர்கொண்டு உலகப் புகழ் பெற்ற கல்வி நிறுவனத்தில் கட்டுமானப் பொருளாதாரம் மற்றும் மேலாண்மைத் துறையில் முதுகலைப் படிப்பைப் பயின்றார்.

அவரது இந்த உயர் கல்விக்காக மத்திய சமூக நீதி, அதிகாரமளித்தல் அமைச்சகம் தேசிய வெளிநாட்டு உதவித் தொகை திட்டத்தின் கீழ் கல்விக்கான கட்டணம், பராமரிப்புச் செலவு, விமானக் கட்டணம், விசா, காப்பீடு உள்ளிட்ட அனுமதிக்கப்பட்ட செலவுக்கான முழு தொகையும் அவருக்கு வழங்கப்பட்டது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2335145&reg=3&lang=1  

****

SK/SV/GS/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2335199) வருகையாளர் எண்ணிக்கை : 4
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी