சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

விளிம்புநிலையிலிருந்து தலைமைத்துவ நிலைக்கு மாறிய பெண்கள்

இடுகை இடப்பட்ட நாள்: 11 NOV 2026 6:30PM by PIB Chennai

தெலங்கானாவின் சிரிசில்லாவில், அனுஷா ரெட்டி, கவிதா கௌட், சுவாதி யாதவ், ஸ்ரீலதா நாயுடு, மாதவி குமார் (அனைவரின் பெயர்களும் மாற்றப்பட்டுள்ளன) ஆகிய ஐந்து பெண் சுகாதாரப் பணியாளர்கள், தனியார் ஒப்பந்தக்காரர்களின் கீழ் கழிவுநீர் தொட்டி சுத்தம் செய்யும் உதவியாளர்களாகப் பணிபுரிந்து வந்தனர். ஒவ்வொருவரும், தொழில்சார் அபாயங்கள், தொழில் முன்னேற்றத்திற்கான குறைந்த வாய்ப்புகள் நிறைந்த, உடல் உழைப்பு தேவைப்படும் துப்புரவுப் பணிகளில் ஈடுபட்டிருந்தபோதிலும், சராசரியாக மாதத்திற்கு சுமார் ரூ.15,000 வருமானம் ஈட்டினர். துப்புரவு சேவைகளில் அனுபவம் இருந்தபோதிலும், நிதி நெருக்கடிகள், வளங்களைப் பெறுவதில் உள்ள வரம்புகள் காரணமாக, அவர்களால் ஒரு சுயமாக நிறுவனத்தை நிறுவ முடியவில்லை.

அந்த ஐந்து பெண்களும்  தூய்மை தொழில்முனைவோர் திட்டம் பற்றி அறிந்துகொண்டது ஒரு குறிப்பிடத்தக்க திருப்புமுனையாக அமைந்தது. தொழில்முனைவோராக மாறுவதற்கான வாய்ப்பை உணர்ந்துகொண்ட அவர்கள், கூட்டாக ஒரு இயந்திரமயமாக்கப்பட்ட துப்புரவு நிறுவனத்தை நிறுவ முடிவு செய்தனர். இத்திட்டத்தின் கீழ் கிடைத்த நிதி உதவியுடன், அவர்கள் இயந்திரமயமாக்கப்பட்ட கழிவு அகற்றும் வாகனங்களை வாங்கி, சிரிசில்லா மாநகராட்சியின் கீழ் துப்புரவு சேவைகளை வழங்கத் தொடங்கினர். இது, துப்புரவு உதவியாளர்களாகப் பணியாற்றிய நிலையிலிருந்து, இயந்திரமயமாக்கப்பட்ட துப்புரவுப் பணிகளை கூட்டாகச் சொந்தமாக்கி நிர்வகிக்கும் நிலைக்கு மாறிய ஒரு முக்கியமான மாற்றத்தைக் குறித்தது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2335147&reg=3&lang=1

****

SS/IR/PS/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2335198) வருகையாளர் எண்ணிக்கை : 8
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी