பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

பிரதமர் கர்நாடகா, குஜராத் மாநிலங்களில் நவம்பர் 13, 14-ம் தேதிகளில் பயணம்

இடுகை இடப்பட்ட நாள்: 11 NOV 2026 5:14PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி கர்நாடகா, குஜராத் மாநிலங்களில் நவம்பர் 13, 14-ம் தேதிகளில் பயணம் மேற்கொள்கிறார். காலை 10:45 மணியளவில் பிரசாந்தி குதிரத்தின் பொன்விழா கொண்டாட்டங்களில் பிரதமர் பங்கேற்கிறார். அப்போது அங்கு கூடியிருப்போர்களிடையே அவர் உரையாற்றவுள்ளார். பிற்பகல் 12:45 மணியளவில் தாவரக்கெரேவிலிருந்து பெங்களூரு ஐஐஎம் மெட்ரோ நிலையம் வரை மெட்ரோ சேவையை பிரதமர் தொடங்கி வைத்து பயணம் மேற்கொள்கிறார். 1.15 மணியளவில் பெங்களூருவில் ரூ.15,600 கோடிக்கும் அதிக மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, முடிவடைந்த திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்து உரையாற்றுகிறார்.

அதை தொடர்ந்து மைசூரு செல்லும் பிரதமர் மாலை 3:30 மணியளவில் பாரத் வன் பகுதியில் நடைபெறம் மரக்கன்று நடும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். மாலை 4:00 மணியளவில் மைசூருவில் உள்ள காஸ்மோஸ் வான்நோக்கி அரங்கை திறந்து வைத்து உரையாற்றுகிறார்.

நவம்பர் 14 அன்று குஜராத்தின் பனஸ்கந்தாவில் உள்ள அம்பாஜி கோவிலில் பிரதமர் தரிசனம் செய்கிறார். அம்பாஜி கோவில்  மிகவும் போற்றக்கூடிய 51 சக்தி  பீடங்களில் ஒன்றாகும்.

பெங்களூருவில் பிரதமர்:

சுவாமி விவேகானந்தா யோகா அனுசந்தனா சமஸ்தானத்தின் குடியிருப்பு தலைமையகமான பிரசாந்தி குதிரம் வளாகத்தின் பொன்விழா கொண்டாட்டங்களில் பிரதமர் பங்கேற்கிறார். இந்நிகழ்ச்சியின் ஓரு பகுதியாக பொன் விழா நிர்வாக கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டுவதுடன் கேரளம் மாநிலம் திருவனந்தபுரத்தில் அமையவுள்ள  சுவாமி விவேகானந்தா யோகா அனுசந்தனா சமஸ்தானத்தின் வளாகத்தையும் அவர் திறந்து வைக்க உள்ளார்.

2047-ல் வளர்ச்சியடைந்த இந்தியா  என்ற தலைப்பில் நவம்பர் 13 முதல் 23 வரை நடைபெறும் இந்த பொன்விழா கொண்டாட்டங்கள் கட்நத 50 ஆண்டு கால நிறுவன கட்டமைப்பு, சேவை ஆகியவற்றை குறிப்பிடுகின்றன. 1975-ம் ஆண்டு அமைக்கப்பட்ட பிரசாந்தி குதிரம், நவீன அறிவியலை இந்தியாவின் ஆன்மீக ஞானத்துடன் ஒருங்கிணைக்கும் நோக்கில் உருவாக்கப்பட்டது. இது சுவாமி விவேகானந்தா யோகா அனுசந்தனா சமஸ்தான அமைப்பின் இருப்பிடமாகும். இது 2002-ம் ஆண்டு நிகர்நிலைப் பல்கலைக்கழகமாக அறிவிக்கப்பட்டது. இது யோகா கல்வி, ஆராய்ச்சிக்காக அர்ப்பணிக்கப்பட்ட நிறுவனமாகும். இந்நிகழ்வு 1926-ம் ஆண்டு பெங்களூருவில் பிறந்த சிறந்த சிந்தனையாளரும், எழுத்தாளரும், அமைப்பாளருமான ஸ்ரீ ஹோங்கசந்திரா வெங்கடராமையா சேஷாத்திரியின் நூற்றாண்டு விழாவையும் கொண்டாடவுள்ளது.  அவர் 1946-ம் ஆண்டு ராஷ்ட்டிரிய ஸ்வயம் சேவக் சங்கத்தில் இணைந்தார். 1987-ம் ஆண்டு முதல் 2000-ம் ஆண்டு வரை அதனுடைய சர்க்காரியாவாக பணிபுரிந்தார்.

சுவாமி விவேகானந்தா யோகா அனுசந்தனா சமஸ்தானத்தின் அமைப்பை உருவாக்கிய தொலைநோக்கு பார்வையாளர்களில் அவரும் ஒருவர். பிரசாந்தி குதிரம் அமைப்பின் வளர்ச்சிக்கும் பல ஆண்டுகளாக அந்நிறுவனத்தின் இலக்குகளை முன்னெடுத்துச் செல்வதற்கும் அவரின் ஊக்கமும் வழிகாட்டுதலும் முக்கியப் பங்காற்றியது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2335089&reg=3&lang=1

****

SS/IR/PS/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2335184) வருகையாளர் எண்ணிக்கை : 4
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Gujarati , Kannada , Malayalam