இடுகை இடப்பட்ட நாள்:
11 NOV 2026 3:06PM by PIB Chennai
மௌலானா அபுல் கலாம் ஆசாத் பிறந்த தினத்தையொட்டி நாடாளுமன்ற கட்டடத்தின் மைய மண்டபத்தில் உள்ள அவரது உருவப்படத்திற்கு மக்களவைத் தலைவர் திரு ஓம் பிர்லா மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்ச்சியில் நாடாளுமன்ற விவகாரம், சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் திரு கிரண் ரிஜிஜூ, நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் உறுப்பினர்கள் ஆகியோரும் மெளலானா அபுல் கலாம் ஆசாதின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள். மக்களவை செயலாளர் திரு உத்பல் குமார் சிங், மாநிலங்களவை செயலாளர் திரு பி சி மோடி ஆகியோரும் மௌலானா அபுல் கலாம் ஆசாத்திற்கு மரியாதை செலுத்தினார்கள்.
இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்களுக்கு மக்களவைச் செயலகம் ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிகளில் தயாரித்திருந்த மௌலானா அபுல் கலாம் ஆசாத்தின் வாழ்க்கை வரலாறு குறித்த புத்தகம் வழங்கப்பட்டது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2334965®=3&lang=1
***
SS/IR/PS/RJ