சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
இடுகை இடப்பட்ட நாள்:
10 NOV 2026 6:45PM by PIB Chennai
புதுச்சேரி நகராட்சியில் 15 ஆண்டுகளுக்கும் மேலாக கழிவுநீர்த் தொட்டி, கழிவுநீர்க் குழாய்களைச் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டு வந்த 60 வயதான பட்டியலினத்தைச் சேர்ந்த சுப்பிரமணியன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது), போதிய பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாததால் தோல் தொற்று, மூச்சுத்திணறல் உள்ளிட்ட உடல்நலப் பாதிப்புகளைச் சந்தித்தார். நான்கு பேர் கொண்ட குடும்பத்தின் ஒரே வருமானம் ஈட்டுபவரான இவரது மாத வருமானம் ரூ.12,000 மட்டுமே.
2025-ல் மத்திய சமூக நீதி, அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் 'நமஸ்தே' திட்டத்தின் கீழ், பாதுகாப்பு உடை, கையுறைகள், காலணிகள், முகக்கவசம், தலைக்கவசம் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்களும், பாதுகாப்பான தூய்மைப் பணிக்கான பயிற்சியும் அவருக்கு வழங்கப்பட்டன.
இதனால் பணியின்போது ஏற்படும் ஆபத்துகள் குறைந்து, உடல்நலம் மேம்பட்டது. மருத்துவச் செலவுகளும், உடல்நலக் குறைவால் ஏற்படும் விடுப்புகளும் தவிர்க்கப்பட்டன. இதன் விளைவாக, அவரது மாத வருமானம் ரூ.12,000-லிருந்து ரூ. 18,000 வரை உயர்ந்தது.
தூய்மைப் பணியாளர்களின் பாதுகாப்பு, உடல்நலம், வாழ்வாதாரம், கண்ணியமான வாழ்க்கையை உறுதி செய்வதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2334780®=3&lang=1
(Release ID : 2334780)
****
SK/PLM/SH