சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தில்லியில் நடைபெறும் ஷில்ப் சமகம் கைவினைக் கண்காட்சியில் ஒட்டுமொத்த விற்பனை சுமார் ரூ. 64.50 லட்சமாக பதிவு

இடுகை இடப்பட்ட நாள்: 10 NOV 2026 7:27PM by PIB Chennai

இந்திய அரசின் சமூக நீதி, அதிகாரமளித்தல் அமைச்சகத்தால், தலைநகர் தில்லியில் நடைபெற்றுவரும்  'ஷில்ப் சமாகம் மேளா 2026' கைவினைக் கண்காட்சி, இந்தியாவின் வளமான பாரம்பரியக் கைவினைத்திறன், கலாச்சார மரபு, தொழில்முனைவு உணர்வை வெளிப்படுத்தும் ஒரு துடிப்பான தளமாக உருவெடுத்துள்ளது.

நவம்பர் 15-ம் தேதி வரை நடைபெறும் இந்தக் கண்காட்சியில், பட்டியலின, இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், துப்புரவுப் பணியாளர்கள், மாற்றுத்திறனாளிகள் முதலிய பிரிவுகளைச் சேர்ந்த கைவினைஞர்களும், பயனாளிகளும், தாங்கள் தயாரித்த பொருட்களைப் பரந்த அளவிலான மக்களிடம் காட்சிப்படுத்தவும் விற்பனை செய்யவும் ஒரு வாய்ப்பை வழங்குகிறது.

நவம்பர் 1 முதல் 9, வரையிலான காலத்தில்,  கண்காட்சியின் ஒட்டுமொத்த விற்பனை ரூ.  64.52 லட்சமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விற்பனை புள்ளிவிவரங்கள், கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்ட தயாரிப்புகளுக்குச் சந்தையில் கிடைத்துள்ள சாதகமான வரவேற்பையும், இதில் பங்கேற்ற கைவினைக் கலைஞர்களுக்குச் சந்தையில் அதிகரித்து வரும் வாய்ப்புகளையும் பிரதிபலிக்கின்றன.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2334802&reg=3&lang=1

****

SK/BR/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2334851) வருகையாளர் எண்ணிக்கை : 9
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी