இடுகை இடப்பட்ட நாள்:
10 NOV 2026 6:18PM by PIB Chennai
ஒடிசா மாநிலம், சிறுதானியங்களை அடிப்படையாகக் கொண்ட விவசாய வளர்ச்சிக்கான தேசியத் திட்டத்தை உருவாக்கி வருகிறது.
பயிர் பல்லுயிர் பாதுகாப்பு, பருவநிலை மாற்றத்தைத் தாங்கும் விவசாயம், நிலையான உணவு முறைகள் ஆகியவை குறித்த இரண்டு நாள் தேசிய மாநாடு இன்று (2026 நவம்பர் 10) புவனேஸ்வரில் தொடங்கியது.
இதில் பேசிய இந்திய வேளாண் ஆராய்ச்சிக் குழும (ஐசிஏஆர் - ICAR) தலைமை இயக்குநர் டாக்டர் எம்.எல். ஜாட், ஒடிசாவில் சிறுதானிய சாகுபடிப் பரப்பை தற்போதைய 1.79 லட்சம் ஹெக்டேரில் இருந்து 2047-க்குள் 5 லட்சம் ஹெக்டேராகவும், உற்பத்தியை 8 லட்சம் மெட்ரிக் டன்னாகவும் உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.
ஒடிசாவின் சிறுதானிய திட்டத்தை தேசிய முன்மாதிரியாகக் குறிப்பிட்ட அவர், 2024-25-ல் 7.5 லட்சம் குவிண்டால் கேழ்வரகு கொள்முதல் செய்யப்பட்டதையும், 2025-26-ல் 8 லட்சம் குவிண்டால் கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதையும் பாராட்டினார்.
மேலும், பாரம்பரிய ரகங்களைப் பாதுகாத்தல், சாகுபடி நுட்பங்களை மேம்படுத்துதல், சிறுதானியப் பதப்படுத்தும் இயந்திரங்கள், மகளிர் சுயஉதவிக் குழுக்கள், விவசாயிகள் உற்பத்தியாளர் அமைப்புகள், சந்தை வாய்ப்புகளை விரிவுபடுத்துதல் ஆகியவற்றை மேற்கொள்ள அவர் வலியுறுத்தினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2334764®=3&lang=1
(Release ID : 2334764)
****
SK/PLM/SH