குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பட்டியலினத்தவர்களின் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களின் வளர்ச்சி குறித்த ஆலோசனை கூட்டம்

இடுகை இடப்பட்ட நாள்: 10 NOV 2026 6:13PM by PIB Chennai

மத்திய சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் அமைச்சகம், பட்டியலினத்தவர்கள் நடத்தும் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களின் மேம்பாடு குறித்து மத்திய பொதுத்துறை நிறுவனங்களுடன் கலந்துரையாடல் கூட்டத்தை நடத்தியது.  2026 நவம்பர் 5-ம் தேதி புதுதில்லியில் உள்ள அம்பேத்கர் சர்வதேச மையத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில், துறைசார்ந்த உயர் அதிகாரிகள், பெல் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட பொதுத்துறை நிறுவனங்களின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். பட்டியலினத்தவர்கள் நடத்தும் சிறு குறு நடுத்தர நிறுவனங்களின் மேம்பாடு குறித்தும், பொதுக் கொள்முதல் கொள்கை திட்டத்தின்கீழ், பட்டியலினத்தவர்களின் சிறுகுறு நடுத்தர நிறுவனங்களின் கொள்முதலை உயர்த்துதல், தொழில்முனைவோருக்கான விழிப்புணர்வு, பொதுத்துறை நிறுவனங்களுடன் தொடர்பை ஏற்படுத்துதல் உள்ளிட்டவை குறித்தும், பட்டியலினத்தவர்களின் சிறு குறு நடுத்தர நிறுவனங்களை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வது குறித்தும் இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2334759&reg=3&lang=1

****

SK/LN/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2334823) வருகையாளர் எண்ணிக்கை : 3
இந்த வெளியீட்டை படிக்க: English , हिन्दी , Gujarati