கப்பல் போக்குவரத்து அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தில்லியில் யமுனை நதியில் சொகுசுப் படகுச் சுற்றுலா : மத்திய அமைச்சர் சர்பானந்த சோனோவால் தொடங்கி வைத்தார்

இடுகை இடப்பட்ட நாள்: 10 NOV 2026 5:47PM by PIB Chennai

தில்லி சோனியா விஹாரில், யமுனை நதியின் முதல் சுற்றுலா படகு சேவையை மத்திய துறைமுகங்கள், கப்பல், நீர்வழிப் போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு சர்பானந்த சோனோவால், தில்லி முதலமைச்சர் ரேகா குப்தா முன்னிலையில் இன்று (2026 நவம்பர் 10) தொடங்கி வைத்தார்.

சோனியா விஹார் – ஜகத்பூர் இடையே சுமார் 6 கிலோ மீட்டல் தூரம் சென்று திரும்பும் வகையில், 30 பேர் பயணிக்கக்கூடிய மின்சார சொகுசுப் படகு இயக்கப்படுகிறது. சுற்றுச்சூழலுக்கு உகந்த போக்குவரத்தை ஊக்குவிப்பதுடன், தில்லியின் சுற்றுலாவையும் உள்ளூர் பொருளாதாரத்தையும் மேம்படுத்துவது இத்திட்டத்தின் நோக்கமாகும்.

யமுனை நதியின் வரலாறு, ஆன்மிகச் சிறப்புகளை விளக்கும் இசை, ஒளி, ஒலி நிகழ்ச்சிகள், இசை நீரூற்று ஆகியவை முக்கியமாக இதில் இடம்பெறுகின்றன. உணவகங்கள், கடைகள், குழந்தைகள் விளையாட்டுப் பகுதி, சறுக்கு விளையாட்டு, பாறையேற்றம், மிதக்கும் படகுத்துறைகள், கழிப்பறைகள், காத்திருப்பு அறைகள், இணையதள பயணச்சீட்டு முன்பதிவு வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

நிகழ்ச்சியில் அமைச்சர் திரு சர்பானந்த சோனோவால் பேசுகையில், பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையில் இந்தியாவின் நதிகள் சுற்றுலா வளர்ந்து வருவதாகக் குறிப்பிட்டார். யமுனை சுற்றுலா படகு சேவை, மக்களை மீண்டும் நதிகளுடன் இணைப்பதுடன், தில்லியில் நதிச் சுற்றுலாவின் புதிய வளர்ச்சிக்கு வழிவகுக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

முதலமைச்சர் திருமதி ரேகா குப்தா பேசுகையில், யமுனை நதி தில்லியின் வரலாறு, கலாசாரம், அடையாளத்தின் முக்கிய அங்கம் என்றார். நதிக்கரையைப் பொதுமக்கள் விரும்பி வந்து செல்லும் சுற்றுலாத் தலமாக மேம்படுத்தவும், உள்கட்டமைப்புகளை உருவாக்கவும் அரசு உறுதிபூண்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2334740&reg=3&lang=1

(Release ID : 2334740)

****

SK/PLM/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2334808) வருகையாளர் எண்ணிக்கை : 3
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Gujarati