இடுகை இடப்பட்ட நாள்:
10 NOV 2026 5:27PM by PIB Chennai
மேற்கு வங்க மாநிலம், வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டம், சுபாஷ்நகரில் நடைபெற்ற நாடு தழுவிய ‘விளைநிலங்களைக் காப்போம்’ (Khet Bachao Abhiyan) என்ற இயக்கம் தொடர்பான நிகழ்ச்சியில், மத்திய வேளாண் துறை இணையமைச்சர் திரு ராம் நாத் தாக்கூர் பங்கேற்றார். இந்திய வேளாண் ஆராய்ச்சி குழுமத்தின் (ஐசிஏஆர்) கீழ் செயல்படும் தேசிய இயற்கை இழை பொறியியல், தொழில்நுட்ப நிறுவனமான ஐசிஏஆர் - நின்ஃபெட் இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தது.
அப்போது பேசிய அமைச்சர், மண்ணின் வளத்தையும் ஆரோக்கியத்தையும் பாதுகாக்க இயற்கை விவசாயத்திற்குத் திரும்ப வேண்டும் என்றும், ரசாயன உரங்களின் பயன்பாட்டைக் குறைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். இயற்கை உரங்கள், இயற்கை பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்தி சுற்றுச்சூழலுக்கு உகந்த விவசாய முறைகளைக் கடைப்பிடிக்குமாறு விவசாயிகளை அவர் கேட்டுக்கொண்டார்.
தேவைக்கேற்ப உரமிடவும், வேளாண் அறிவியல் மையங்கள் வழங்கும் தொழில்நுட்ப வழிகாட்டுதல்களைப் பெறவும் அறிவுறுத்தினார். பருவநிலை மாற்றத்தைத் தாங்கும் பயிர் முறைகளுடன் நவீன தொழில்நுட்பங்களைப் பின்பற்ற அவர் வலியுறுத்தினார்.
2026 அக்டோபர் 22 முதல் நவம்பர் 30 வரை நடைபெறும் இவ்வியக்கத்தின் முக்கிய நோக்கம், மண் வளத்தைப் பாதுகாத்து நிலையான விவசாயத்தை உறுதிப்படுத்துவதாகும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2334717®=3&lang=1
(Release ID : 2334717)
****
SK/PLM/SH