இடுகை இடப்பட்ட நாள்:
10 NOV 2026 5:24PM by PIB Chennai
இந்தியா அடுத்த உயிரி தொழில்நுட்பம் சார்ந்த தொழில் புரட்சிக்கு தயாராக உள்ளதாக மத்திய அறிவியல், தொழில்நுட்பத்துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.
தேசிய நோய் எதிர்ப்பியல் நிறுவனத்தில் நடைபெற்ற உயிரி தொழில்நுட்ப ஆராய்ச்சி மற்றும் புதுமைக்கண்டுபிடிப்பு குழுமத்தின் மூன்றாவது நிறுவன ஆண்டு தினத்தையொட்டி உரையாற்றிய அவர், அறிவியல் நிறுவனங்களுக்கிடையே வலுவான ஒருங்கிணைப்பு தேவையென்றும் இந்தியாவின் உயிரி தொழில்நுட்ப சூழலில் தொழில் நிறுவனங்களின் பங்களிப்பு அதிகரிக்க வேண்டுமென்றும் வலியுறுத்தினார்.
அறிவியல் நிறுவனங்களுக்கிடையேயான தனித்துவ செயல்பாட்டு முறைகளை களைந்து ஒருங்கிணைப்பை ஏற்படுத்த அரசு ஊக்கமளித்து வருவதாக டாக்டர் ஜிதேந்திர சிங் கூறினார். உயிரி தொழில்நுட்ப ஆராய்ச்சி மற்றும் புதுமைக்கண்டுபிடிப்பு குழுமம் ஒரு கூட்டுக் குடும்பம் என்று குறிப்பிட்ட அவர், அதிலுள்ள நிறுவனங்கள் தங்களுடைய தனித்தன்மையையும், சுதந்திரத்தையும், தன்னாட்சியையும் கொண்டு வளங்களை பகிர்ந்து கொள்வதாக தெரிவித்தார். இது பல்வேறு இயக்குநரகங்கள், அனுமதிகள் குறித்த நடைமுறை சிக்கல்களை குறைப்பதோடு அறிவியல் ஒத்துழைப்பிற்கான வாய்ப்புகளையும் உருவாக்குவதாக அவர் கூறினார். மற்ற துறைகளும், அமைச்சகங்களும் இந்த மாதிரியை பின்பற்றியுள்ளதாக அவர் கூறினார்.
இத்துறையின் வளர்ச்சி குறித்து குறிப்பிட்ட டாக்டர் ஜிதேந்திர சிங், தற்போதைய அரசு பொறுப்பேற்றபோது பத்து பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்த இந்தியப் பொருளாதாரம் தற்போது 195 பில்லியன் அமெரிக்க டாலருக்கு மேலாக வளர்ச்சியடைந்துள்ளது என்று குறிப்பிட்டார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2334716®=3&lang=1
****
SK/IR/PS/SH