புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கம் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

சிறப்பு தூய்மை இயக்கம் 6-ன் கீழ், மத்திய புள்ளியியல், திட்ட அமலாக்க அமைச்சகம் பணிகளை வெற்றிகரமாக நிறைவு செய்தது

இடுகை இடப்பட்ட நாள்: 10 NOV 2026 11:38AM by PIB Chennai

நாடு முழுவதும் 2026 அக்டோபர் 2 முதல் 31-ம் தேதி வரை நடைபெற்ற சிறப்பு தூய்மை இயக்கம் 6-ஐ மத்திய புள்ளியியல், திட்ட அமலாக்கம் அமைச்சகம் வெற்றிகரமாக நிறைவு செய்தது. பல்வேறு மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் உள்ள தமது கள அலுவலகங்கள், சார்பு அலுவலகங்கள் அது தொடர்புடைய தன்னாட்சி அலுவலங்களில் குறிப்பிடத்தக்க சாதனைகளுடன் தீவிரமாக பங்கேற்றது.

இந்த இயக்க நடவடிக்கைகளின்போது பொதுமக்களின் 48 குறைகளுக்கும், 9 மேல்முறையீடுகளுக்கும் தீர்வு காணப்பட்டது. மொத்தம் 718 நேரடி கோப்புகள் ஆய்வு செய்யப்பட்டு அவற்றில் 433 கோப்புகள் நீக்கப்பட்டன. அத்துடன், 1,607 மின் கோப்புகள் ஆய்வு செய்யப்பட்டு 1,522 மின் கோப்புகள் நீக்கப்பட்டது.

மின்னணுக் கழிவுகள், பழைய கழிவுப்பொருட்களை அகற்றியதன் மூலம் ரூ.3,69,819 வருவாய் கிடைத்தது. 114 தூய்மைப் பணி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அலுவலக வளாகங்களில் தூய்மையை ஊக்குவிக்கவும், பசுமையான சூழலை ஏற்படுத்தவும், மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்:https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2334546&reg=3&lang=1&_gl=1

***

SS/IR/PS/GS


(வெளியீட்டு அடையாள எண்: 2334663) வருகையாளர் எண்ணிக்கை : 15
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी