சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

என்எஃப்எஸ்சி உதவித்தொகை மூலம் கல்வி ஆதரவிலிருந்து கல்விசார் சிறப்பு

இடுகை இடப்பட்ட நாள்: 09 NOV 2026 7:10PM by PIB Chennai

37 வயதான டாக்டர் அமித் குமார் (பெயர் மாற்றப்பட்டுள்ளது), உதவிப் பேராசிரியராகத் தனக்கான இடத்தை உருவாக்கியுள்ளார். இந்த வெற்றிப் பயணம், அவரது விடாமுயற்சியாலும், 'பட்டியலின  மாணவர்களுக்கான தேசிய உதவித்தொகை' (என்எஃப்எஸ்சி) திட்டத்தின் மூலம் கிடைத்த ஆதரவாலும் ஏற்பட்டுள்ளது.

உயர்கல்வியைத் தொடர்ந்தபோது நிதி, கல்வி, சமூக ரீதியான சவால்களை அவர் எதிர்கொண்டார். தரமான கல்விக்கான மட்டுப்படுத்தப்பட்ட அணுகல், நிதி உறுதியற்ற தன்மை, போதிய போக்குவரத்து வசதிகள் இல்லாமை, குறைந்த வாய்ப்புகள் போன்றவை அவரது கல்விப் பயணத்தில் பெரும் தடைகளை உருவாக்கின. இத்தகைய சவால்கள் இருந்தபோதிலும், அவர் உயர்கல்வியைத் தொடர்வதிலும், நிதி சுதந்திரத்தை அடைவதிலும், தனது குடும்பத்திற்கு ஆதரவளிப்பதிலும் உறுதியுடன் இருந்தார்.

சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் என்எஃப்எஸ்சி திட்டம் மூலம் கிடைத்த நிதி உதவியும் கல்வி சார்ந்த ஆதரவும், அவர் எவ்வித தேவையற்ற நிதிச் சுமையுமின்றி தனது உயர்கல்வியையும் ஆராய்ச்சியையும் தொடர வழிவகுத்தன. இது, ஆராய்ச்சி தொடர்பான செலவுகளைச் சமாளிக்கவும், பாடப் புத்தகங்கள், இதர கல்வித் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ளவும் அவருக்கு உதவியது.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2334438&reg=3&lang=1

***

SS/BR/GS


(வெளியீட்டு அடையாள எண்: 2334570) வருகையாளர் எண்ணிக்கை : 8
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Assamese