தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
அசாமில் ரயில் நிலையங்களில் செல்போன் நெட்வொர்க் தரம் குறித்த சோதனை
இடுகை இடப்பட்ட நாள்:
09 NOV 2026 4:20PM by PIB Chennai
இந்திய தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் சார்பில், அசாம் மாநிலத்தில் உள்ள தின்சுகியா முதல் கவுகாத்தி வரையிலான ரயில் நிலையங்களில் செல்போன் நெட்வொர்க் தரம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. செல்போனில் பேசும்போது ஒலியின் தரம், சிக்னல், பதிவிறக்கம், செல்போனில் பேசிக் கொண்டிருக்கும்போது இணைப்பு துண்டிப்பு உள்ளிட்டவைகளுக்கான சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. 2ஜி முதல் 5ஜி வரையிலான அலைவரிசையின் தரம் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது. ரயில்வே வழித்தடத்தில் 515.9 கிலோ மீட்டர் தொலைவுக்கு நெட்வொர்க்கின் தரம் குறித்து சோதனை நடத்தினர். பிஎஸ்என்எல், ஏர்டெல் உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களின் செல்போன் சேவையும் பரிசோதிக்கப்பட்டது. இந்த ஆய்வின் முடிவுகள் சம்மந்தப்பட்ட செல்போன் சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. செல்போன் வாடிக்கையாளர்கள் பயன்பெறும் வகையில் இந்த நவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் விபரங்களை இந்திய தொலைத் தொடர்புத்துறை ஒழுங்குமுறை ஆணையத்தின் இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2334364®=3&lang=1
****
SS/LN/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2334455)
வருகையாளர் எண்ணிக்கை : 4