பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

சத்தீஸ்கர் மாநிலம் பஸ்தரில் பாதுகாப்புப் படையினருடன் தீபாவளி கொண்டாடிய காட்சிகளைப் பிரதமர் பகிர்ந்துள்ளார்

இடுகை இடப்பட்ட நாள்: 08 NOV 2026 7:07PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி, சத்தீஸ்கர் மாநிலம் பஸ்தர், கரன்பூரில் உள்ள கோப்ரா செயல்பாட்டுத் தளத்தில், வீரர்களுடன் தாம் பங்கேற்ற தீபாவளி கொண்டாட்டங்களின் சில காட்சிகளைப் பகிர்ந்துளளார்.

பாதுகாப்புப் படையினரின் அர்ப்பணிப்பால் இந்தக் கொண்டாட்டங்கள் சாத்தியமானதாக அவர் கூறினார். பஸ்தரில் தீபாவளியின் உண்மையான உணர்வு பிரதிபலிப்பதாக திரு நரேந்திர மோடி தெரிவித்தார். நக்சலிசம் இப்போது முடிவுக்கு வந்து அது கடந்த கால வரலாறாகிவிட்டது என்றும், வளர்ச்சியே எதிர்காலத்தின் நோக்கம் என்றும் அவர் குறிப்பிட்டார். இந்த நிகழ்வை சிறப்புமிக்கதாகவும், மறக்க முடியாததாகவும் திரு நரேந்திர மோடி விவரித்தார்.

இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

“பஸ்தரில் தீபாவளி. பெருமைகள் அனைத்தும் நமது பாதுகாப்புப் படையினரையே சாரும். அவர்களுக்கு நன்றி!

நக்சலிசம் வரலாறாகிவிட்டது.

வளர்ச்சியே எதிர்காலத்திற்கான நோக்கம்.

இன்றைய நாள் சிறப்புமிக்கதாகவும், மறக்க முடியாததாகவும் அமைந்தது.

பஸ்தரில் தீபாவளிப் பண்டிகையின் உற்சாகம் கோலாகலமாக வெளிப்பட்டது!"

கொண்டாட்டங்கள் தொடர்பாக இரண்டு காணொலிப் பதிவுகளையும் பிரதமர் பகிர்ந்துள்ளார்.

****

(Release ID: 2334176)

SS/PLM/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2334190) வருகையாளர் எண்ணிக்கை : 22
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , Marathi , हिन्दी , Gujarati , Malayalam