இடுகை இடப்பட்ட நாள்:
07 NOV 2026 8:06PM by PIB Chennai
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (இபிஎஃப்ஓ), 2026 அக்டோபர் மாதத்தில் நடைபெற்ற தூய்மைக்கான சிறப்பு இயக்கம் 6.0-ஐ வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. இதன் மூலம் நிர்வாகத் திறன், தூய்மை, வெளிப்படைத்தன்மை, மேம்படுத்தப்பட்ட பொதுச் சேவை வழங்கல் ஆகியவற்றின் மீதான தனது அர்ப்பணிப்பை இபிஎஃப்ஓ மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.
ஒரு மாத காலத்தில், 2,36,021 குறைகளை இபிஎஃப்ஓ தீர்த்து வைத்துள்ளது. நிர்ணயிக்கப்பட்ட இலக்கை விட இது 15.1% அதிகம். மொத்தம் 41,875 ஆவணக் கோப்புகள் ஆய்வு செய்யப்பட்டன. மின்னணு-கோப்புகளைப் பொறுத்தவரை, 8,160 என்ற இலக்குக்கு எதிராக 8,355 கோப்புகள் ஆய்வு செய்யப்பட்டுள்ளன.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2334030®=3&lang=1
***
TV/RB/RJ