இடுகை இடப்பட்ட நாள்:
08 NOV 2026 11:44AM by PIB Chennai
இந்திய அரசின் கலாச்சார அமைச்சகம், அருணாச்சலப் பிரதேச அரசு மற்றும் புது தில்லியில் உள்ள சர்வதேச பௌத்த கூட்டமைப்பு ஆகியவற்றுடன் இணைந்து ஏற்பாடு செய்திருந்த, சாக்கியமுனி புத்தரின் புனிதப் பொருட்களின் கண்காட்சி, 2026 நவம்பர் 7 அன்று தவாங் பகுதியில் நிறைவடைந்தது. பக்தர்களிடமிருந்தும் பார்வையாளர்களிடமிருந்தும் பெரும் வரவேற்பைப் பெற்ற இந்த ஏழு நாள் கண்காட்சியின் போது, மொத்தம் 31,000 பக்தர்களும், பார்வையாளர்களும் தவாங் மடாலயம் சென்று, புனிதப் பொருட்களை தரிசித்தனர்.
புனிதப் பொருட்கள், தகுந்த நெறிமுறைகள் மற்றும் சடங்கு ஏற்பாடுகளுடன், புதுதில்லியில் உள்ள தேசிய அருங்காட்சியகத்திலிருந்து 2026 அக்டோபர் 31 அன்று தவாங்கை வந்தடைந்தன. அருணாச்சலப் பிரதேச முதலமைச்சர் திரு பெமா கண்டு, மத்திய கலாச்சாரம், சுற்றுலாத்துறை அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத் முன்னிலையில், இந்தப் புனிதப் பொருட்களை சடங்கு முறைப்படி பெற்றுக்கொண்டார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2334086®=48&lang=2
****
AD/RB/RJ