இடுகை இடப்பட்ட நாள்:
08 NOV 2026 9:11AM by PIB Chennai
தொழிலாளர் சட்டத் தொகுப்புகள், தொழிலாளர் நலன், சமூகப் பாதுகாப்பு குறித்த மாவட்ட அளவிலான திறன் மேம்பாடு மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி, மத்தியப் பிரதேச மாநிலம் தேவாஸில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை, மத்திய அரசின் தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகமும் மத்தியப் பிரதேச அரசின் தொழிலாளர் துறையும் இணைந்து, ஏற்பாடு செய்திருந்தன.
தொழிலாளர் சட்டங்கள், அதன் கீழ் உருவாக்கப்பட்ட விதிகள் குறித்து வேலையளிப்பவர்கள், மனிதவள, சட்ட, நிதித்துறை வல்லுநர்களிடையே விழிப்புணர்வை மேம்படுத்துவதை இந்த நிகழ்ச்சி நோக்கமாகக் கொண்டிருந்தது. தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் இயக்குநர் திரு எஸ்.ஆர். தத்தா இந்நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கி, தொழிலாளர் சட்டத் தொகுப்புகளின் முக்கிய அம்சங்களை எடுத்துரைத்து, முதன்மை உரை நிகழ்த்தினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2334064®=48&lang=2
****
AD/RB/RJ