இடுகை இடப்பட்ட நாள்:
06 NOV 2026 6:48PM by PIB Chennai
உரங்கள் துறையும் அதன் பொதுத்துறை நிறுவனங்களும், 2026 அக்டோபர் 2 முதல் 31 வரை சிறப்பு இயக்கம் 6-ஐ வெற்றிகரமாகச் செயல்படுத்தின. நிர்வாக சீர்திருத்தங்கள் துறை வெளியிட்ட வழிகாட்டுதல்களுக்கு இணங்க, அரசு அலுவலகங்களில் தூய்மையை நிறுவனமயமாக்குதல், நிலுவையில் உள்ள பணிகளைக் குறைத்தல், செயல்திறனை மேம்படுத்துதல் ஆகியவற்றை இந்த இயக்கம் நோக்கமாகக் கொண்டிருந்தது.
31 அக்டோபர் 2026 நிலவரப்படி, உரத் துறையும் அதன் பொதுத்துறை நிறுவனங்களும், அச்சு, மின்னணுக் கோப்புகளை மறுஆய்வு செய்வதிலும், பழைய பதிவேடுகளை நீக்குவதிலும், தேவையற்ற பொருட்களை அப்புறப்படுத்துவதிலும், அலுவலக வளாகங்களில் தூய்மையை மேம்படுத்துவதிலும் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டுள்ளன.
உரத்துறையின் பொதுத்துறை நிறுவனங்களால் 3,184 வெளிப்புறத் தூய்மை இயக்கங்கள் நடத்தப்பட்டன. பழைய பொருட்களை அகற்றியதன் மூலம் ரூ. 87,54,854 வருவாய் ஈட்டப்பட்டது. 1,26,052 சதுர அடி இடம் விடுவிக்கப்பட்டு, அலுவலக வளாகங்களைச் சிறந்த முறையில் பயன்படுத்த வழிவகை செய்யப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2333743®=48&lang=2
***
TV/PLM/RJ