எஃகுத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

சிறப்புத் தூய்மை இயக்கத்தை வெற்றிகரமாக நிறைவு செய்தது எஃகுத் துறை

இடுகை இடப்பட்ட நாள்: 07 NOV 2026 1:49PM by PIB Chennai

மத்திய எஃகுத் துறை அமைச்சகம், நிலுவையில் உள்ள பணிகளை முடிப்பதற்கான ஆறாவது சிறப்புத் தூய்மை இயக்கத்தை, 2026 அக்டோபர் 2 முதல் 31 வரை வெற்றிகரமாக நடத்தியது.

எஃகு துறையில் இந்த இயக்கத்தின் முக்கிய சாதனைகள்:

* பொதுமக்களின் புகார்கள், மேல்முறையீடுகளுக்குத் தீர்வு காண நிர்ணயிக்கப்பட்ட இலக்கு 100% எட்டப்பட்டது.

* 21,164 பழைய காகிதக் கோப்புகள் ஆய்வு செய்யப்பட்டன. அவற்றில் 17,107 தேவையற்ற கோப்புகள் அகற்றப்பட்டன.

* இலக்காக நிர்ணயிக்கப்பட்ட 301 தூய்மைப் பணிகளும் முழுமையாக மேற்கொள்ளப்பட்டன.

* தேவையற்ற பழைய பொருட்கள் அகற்றப்பட்டதன் மூலம் சுமார் 17,501 சதுர அடி அலுவலக இடம் காலி செய்யப்பட்டது.

நிர்வாகத் திறனை மேம்படுத்துதல், தூய்மையைப் பேணுதல், வெளிப்படைத்தன்மையையும்  சிறந்த நிர்வாகத்தையும் உறுதி செய்தல் ஆகியவற்றில் தொடர்ந்து கவனம் செலுத்தப்படும் என எஃகுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2333923&reg=3&lang=1

****

SK/PLM/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2333950) வருகையாளர் எண்ணிக்கை : 13
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी