இடுகை இடப்பட்ட நாள்:
07 NOV 2026 11:26AM by PIB Chennai
ஐரோப்பிய யூனியனின் ‘ஹொரைசன் ஐரோப்பா’ (Horizon Europe) ஆராய்ச்சி, புத்தாக்கத் திட்டத்தில் இந்தியா இணைவதற்கான பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளன.
இதன் மூலம் இந்திய ஆராய்ச்சியாளர்கள், கல்வி நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள் கூட்டு ஆராய்ச்சித் திட்டங்களில் பங்கேற்று நிதியுதவி பெறவும், ஐரோப்பிய ஆராய்ச்சிக் குழுக்களின் நவீன ஆராய்ச்சி வசதிகளைப் பயன்படுத்தவும் வாய்ப்பு கிடைக்கும்.
மேலும், ஆராய்ச்சியாளர்களின் பரிமாற்றம், புதிய தீர்வுகளை இணைந்து உருவாக்குதல் ஆகிய செயல்பாடுள் அதிகரிக்கும். சுகாதாரம், டிஜிட்டல் தொழில்நுட்பம், தொழில்துறை, விண்வெளி, பருவநிலை, எரிசக்தி, போக்குவரத்து, உணவு, உயிரி பொருளாதாரம் ஆகிய துறைகளில் ஒத்துழைப்பு அதிகரிக்கப்படும்.
2026 ஜனவரி 27-ல் நடைபெற்ற இந்தியா–ஐரோப்பிய யூனியன் உச்சி மாநாட்டைத் தொடர்ந்து இந்த பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2333903®=3&lang=1
****
SK/PLM/RJ