பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

புதிய அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள பாதுகாப்புப் படைகள் தயார் நிலையில் இருக்க வேண்டும் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்

இடுகை இடப்பட்ட நாள்: 07 NOV 2026 1:44PM by PIB Chennai

தீபாவளியை முன்னிட்டு மேற்கு வங்கத்தின் பாக்டோக்ரா விமானப்படைத் தளத்தில் விமானப்படை வீரர்களை இன்று (07.11.2026) சந்தித்த பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங், புதிய அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள முப்படைகளும் எப்போதும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

எல்லைகளில் உருவாகும் போர் மட்டுமின்றி, மறைமுகப் போர், இணையவழித் தாக்குதல், ஆளில்லா விமானங்கள் மூலம் தாக்குதல், தவறான தகவல்களைப் பரப்புதல் போன்ற புதிய சவால்களும் அதிகரித்து வருவதாக அவர் தெரிவித்தார். குறிப்பாக, இணையவழித் தாக்குதல்களைத் தடுப்பது, தகவல்களின் நம்பகத்தன்மையைப் பாதுகாப்பது ஆகியவற்றில் கவனம் செலுத்த வேண்டும் என்று அவர் கூறினார்.

பாக்டோக்ரா பகுதி, குறிப்பாக வடகிழக்கு மாநிலங்களின் பாதுகாப்புக்கு முக்கியமானது என்றும், இங்கு பணியாற்றும் விமானப்படை வீரர்கள் கிழக்குப் பிராந்தியத்தின் பாதுகாப்புக் கேடயமாகத் திகழ்கிறார்கள் என்றும் அவர் பாராட்டினார். உள்ளூர் மக்களுடன் நல்லுறவை வளர்த்து, அவர்களின் நம்பிக்கையைப் பெறுவதன் மூலம் எதிரிகளின் சதித்திட்டங்களை முறியடிக்க முடியும் என்றும் அமைச்சர் கூறினார்.

உள்நாட்டிலேயே நவீன ராணுவத் தொழில்நுட்ப சாதனங்களைத் தயாரிப்பதில் இந்திய நிறுவனங்களின் பங்களிப்பு அதிகரித்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.

மேலும், அக்னிவீரர்களுக்கான இரண்டாவது பணிக்காலத் திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருப்பது குறிப்பிடத்தக்க தீபாவளிப் பரிசு என்று அவர் கூறினார்.

விமானப்படை வீரர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் தீபாவளி வாழ்த்துகளைத் தெரிவித்த அவர், நாட்டின் பாதுகாப்புக்காகப் பணியாற்றும் வீரர்களின் குடும்ப நலனிலும் அரசு அக்கறை கொண்டுள்ளதாகத் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் விமானப்படைத் தலைமைத் தளபதி ஏர் சீஃப் மார்ஷல் அசுதோஷ் தீட்சித் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2333922&reg=3&lang=1

****

SK/PLM/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2333940) வருகையாளர் எண்ணிக்கை : 8
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , Gujarati