பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

முதலாவது பிம்ஸ்டெக் கடல்சார் பாதுகாப்புப் பயிற்சி நிறைவு

இடுகை இடப்பட்ட நாள்: 06 NOV 2026 6:13PM by PIB Chennai

2026 அக்டோபர் 30 முதல் நவம்பர் 03 வரை அந்தமான், நிக்கோபார் தீவுகளின் ஸ்ரீ விஜயபுரத்தில் முதலாவது பிம்ஸ்டெக் கடல்சார் பாதுகாப்புப் பயிற்சி நடைபெற்றது.

இந்தப் பயிற்சியில் பிம்ஸ்டெக் உறுப்பு நாடுகளின் கடற்படைக் கப்பல்கள் பங்கேற்றன.  இந்தியக் கடற்படைக் கப்பல்கள் ஐஎன்எஸ் தரகிரி, ஐஎன்எஸ் கார்முக், ஐஎன்எஸ் சரயு, மியான்மர் கடற்படைக் கப்பலான யுஎம்எஸ் கிங் ஆங் ஸேயா , இலங்கை கடற்படைக் கப்பலான எஸ்எல்என்எஸ் கஜபாகு ஆகியவை இதில் பங்கேற்றன. பிராந்திய கடல்சார் ஒத்துழைப்பையும் கூட்டுப் பாதுகாப்பையும் மேம்படுத்துவதில் இந்த நிகழ்வு ஒரு குறிப்பிடத்தக்க அம்சமாக அமைந்தது.

ஸ்ரீ விஜயபுரத்தில் நடைபெற்ற துறைமுகக் கட்ட நிகழ்வில், உயர்மட்ட சந்திப்புகள், தொழில்முறை கலந்துரையாடல்கள், கலாச்சாரப் பரிமாற்றங்கள் இடம்பெற்றன. அதனைத் தொடர்ந்து, 2026 நவம்பர் 02 முதல் 03 வரை ஸ்ரீ விஜயபுரத்திற்கு அப்பால் நடத்தப்பட்ட கடல் கட்ட நிகழ்வில், ஒருங்கிணைக்கப்பட்ட கடல்சார் கூட்டுச் செயல்பாட்டு நடவடிக்கைகள் இடம்பெற்றன. இது, பாதுகாப்பான, நிலையான கடல்சார் சூழலை நோக்கிய பிம்ஸ்டெக் உறுப்பு நாடுகளின் கூட்டு உறுதிப்பாட்டை எடுத்துக் காட்டியது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2333721&reg=3

****

TV/PLM/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2333851) வருகையாளர் எண்ணிக்கை : 5
இந்த வெளியீட்டை படிக்க: हिन्दी , English , Urdu , Marathi