சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
இடுகை இடப்பட்ட நாள்:
06 NOV 2026 8:50PM by PIB Chennai
புதுச்சேரி நகராட்சியில் கழிவுநீர் மற்றும் செப்டிக் டேங்க் சுத்தம் செய்யும் பணியாளராக 15 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றிய பட்டியலின பிரிவைச் சேர்ந்த 60 வயது துப்புரவுத் தொழிலாளியான திரு ரமேஷ் குமார் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) போதிய தனிநபர் பாதுகாப்பு உபகரணங்கள் ஏதுமின்றி, அபாயகரமான சூழலில் பல ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். இதனால் அவருக்குத் தொடர்ச்சியான தோல் தொற்றுகளும் சுவாசக் கோளாறுகளும் ஏற்பட்டன.
2025-ம் ஆண்டில், சமூக நீதி, அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் 'நமஸ்தே' திட்டத்தின் கீழ் அவர் ஆதரவைப் பெற்றார். அவருக்கு முழுமையான தனிநபர் பாதுகாப்பு உபகரணங்கள் தொகுப்பு வழங்கப்பட்டதுடன், பாதுகாப்பான சுகாதார நடைமுறைகள், தொழில் சார்ந்த உடல்நல அபாயங்களைத் தடுப்பது குறித்த விழிப்புணர்வுப் பயிற்சியும் அவருக்கு அளிக்கப்பட்டது.
இந்த உதவி அவரது அன்றாடப் பணியில் ஒரு நேர்மறையான மாற்றத்தை ஏற்படுத்தியது. முன்னர் சுமார் ரூ. 12,000 ஆக இருந்த அவரது மாதாந்திர வருமானம், திட்டத்தில் சேர்ந்த பின் சுமார் ரூ. 16,000–ரூ. 18,000 ஆக அதிகரித்தது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2333803®=48&lang=2
****
TV/PLM/RJ