ரெயில்வே அமைச்சகம்
azadi ka amrit mahotsav

புதுதில்லி ரயில் நிலையத்தில் பயணிகளுக்கான வசதிகள், பாதுகாப்பு ஏற்பாடுகளை மத்திய அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு செய்தார்

இடுகை இடப்பட்ட நாள்: 06 NOV 2026 7:24PM by PIB Chennai

மத்திய ரயில்வே அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ், புதுதில்லி ரயில் நிலையத்தில் இன்று விரிவான ஆய்வு மேற்கொண்டார். தீபாவளி, சத் பண்டிகைக் காலங்களில் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்பதால், அதற்கான முன்னேற்பாடுகள், பாதுகாப்பு ஏற்பாடுகள், பயணிகளுக்கான வசதிகள் குறித்து அவர் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது, அவர் பயணிகளிடம் கலந்துரையாடி, அங்குள்ள வசதிகள் குறித்த அவர்களின் கருத்துகளைக் கேட்டறிந்தார்.

துர்கா பூஜை, தீபாவளி, சத் பூஜை உள்ளிட்ட பண்டிகைக் காலங்களில்தான் ஒவ்வொரு ஆண்டும் பயணிகள் கூட்டம் மிக அதிகமாக இருக்கும் என்று திரு வைஷ்ணவ் தெரிவித்தார். இந்திய ரயில்வே, பயணிகளுக்கான வசதிகளை மேம்படுத்தவும், சேவைகளைச் சீரமைக்கவும், பயணிகளுக்கு கூடுதல் வசதிகளை வழங்கவும் நாள்தோறும் தொடர்ச்சியான முன்னேற்றங்களைச் செய்து வருவதாக அவர் கூறினார்.

அதிகரித்து வரும் பயணிகள் போக்குவரத்தைக் கையாள்வதற்காக, கூடுதல் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாகவும், ரயில்வே பாதுகாப்புப் படை பணியாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய அமைச்சர் தெரிவித்தார். மேலும், கண்காணிப்பையும், பாதுகாப்பையும் வலுப்படுத்த கூடுதலாக 700 செயற்கை நுண்ணறிவு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. பயணிகள் ரயில் நிலையத்திற்கு வந்தடைந்த பிறகு, தங்களுக்குரிய ரயில்களை மிக விரைவாகச் சென்றடைவதை உறுதி செய்ய சிறப்பு கவனம் செலுத்தப்பட்டு வருவதாகவும் அவர் வலியுறுத்தினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2333760&reg=3&lang=1

****

TV/RB/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2333810) வருகையாளர் எண்ணிக்கை : 9
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Marathi , Gujarati , Odia , Kannada