உள்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

உத்தராகண்ட் காவல்துறைக்கு 'குடியரசுத்தலைவரின் வண்ணக் கொடி' விருதை வழங்கினார், மத்திய அமைச்சர் திரு அமித் ஷா

இடுகை இடப்பட்ட நாள்: 06 NOV 2026 7:16PM by PIB Chennai

மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு அமித் ஷா, இன்று டேராடூனில் உத்தராகண்ட் காவல்துறைக்கு 'குடியரசுத்தலைவரின் வண்ணக் கொடி’ விருதை வழங்கினார். இந்நிகழ்ச்சியில், உத்தராகண்ட் முதலமைச்சர் திரு புஷ்கர் சிங் தாமி, இதர  முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

விழாவில் பேசிய அவர், பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையின் கீழ், நாடு நக்சலிசத்திலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். பல்வேறு மாநிலங்களின் காவல்துறையினருடன், சிஆர்பிஎஃப், ஐடிபிபி, பிஎஸ்எஃப் உள்ளிட்ட படைகள் இணைந்து, ஐந்து தசாப்தங்களாக நீடித்த இந்த அச்சுறுத்தலுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளன. இந்தச் சூழலில் லட்சக்கணக்கான மக்கள் தங்கள் உயிரை இழந்தனர். நாடு இப்போது நக்சலிசத்திலிருந்து விடுபட்டுவிட்டதாக 2026 மார்ச் 30 அன்று நாடாளுமன்றத்தில் தான் அறிவித்ததை அவர் நினைவு கூர்ந்தார்.

நாடு தற்போது மற்றொரு முக்கிய பிரச்சினையான போதைப்பொருள் அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ளதால், நாம் ஓய்வெடுக்க முடியாது என்று அவர் கூறினார். இந்தியாவை போதைப்பொருள் இல்லாத நாடாக மாற்றுவதே தங்கள் உறுதிப்பாடு என்று திரு ஷா தெரிவித்தார். 2029 டிசம்பர் 31-க்குள் இந்தியாவை முழுமையாக போதைப்பொருள் இல்லாத நாடாக மாற்றவும், போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுபவர்களைச் சிறையில் அடைக்கவும் தீர்மானித்துள்ளதாக அவர் கூறினார். போதைப்பொருள் இல்லாத இந்தியாவை உருவாக்கும் இந்த உறுதிப்பாட்டை நிறைவேற்றுவதில் உத்தராகண்ட் காவல்துறையும் மிகச் சிறந்த பணியைச் செய்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2333753&reg=3&lang=1

****

TV/RB/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2333808) வருகையாளர் எண்ணிக்கை : 6
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Gujarati , Odia