நிலக்கரி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

நிலக்கரித் துறையில் நவீன தொழில்நுட்பங்களும் விரைவான சீர்திருத்தங்களும் அவசியம் : மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி

இடுகை இடப்பட்ட நாள்: 05 NOV 2026 6:44PM by PIB Chennai

கோவாவில் இன்றும் நாளையும் (நவம்பர் 5, 6) நடைபெறும் 4-வது மாநில சுரங்கத்துறை அமைச்சர்கள் மாநாட்டில், மத்திய நிலக்கரி, சுரங்கத்துறை அமைச்சர் ஜி. கிஷன் ரெட்டி இன்று (05.11.2026) பங்கேற்றார். இதில் பேசிய அவர், நிலக்கரியிலிருந்து எரிவாயு தயாரித்து, தொழில்துறை வளர்ச்சி, வேலைவாய்ப்பு, எரிசக்தித் தன்னிறைவு ஆகியவற்றை அதிகரிக்க வலியுறுத்தினார். இறக்குமதியைக் குறைக்க, கனிமங்கள் ஆய்வு, வெட்டியெடுத்தல், சுத்திகரித்தல் ஆகியவற்றை உள்நாட்டிலேயே மேம்படுத்த வேண்டும் என்று அவர் கூறினார். செயற்கை நுண்ணறிவு டிஜிட்டல் தொழில்நுட்பம் மூலம் சுரங்கப் பணிகளை மேம்படுத்தவும் அவர் அழைப்பு விடுத்தார்.

 ஏலம் விடப்பட்ட சுரங்கங்களை விரைவில் செயல்படுத்தவும், புதிய சுரங்க ஏலங்களைத் துரிதப்படுத்தவும் மாநில அரசுகள், நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

பாதுகாப்பான சுரங்கப் பணிகள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, ஆகியவற்றுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

இந்த மாநாட்டில் நிலக்கரித்துறை இணை அமைச்சர் திரு சதீஷ் சந்திர துபே உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மத்திய–மாநில அரசுகளின் ஒருங்கிணைப்புடன் நிலக்கரித் துறையை மேம்படுத்துவதே இந்த இரண்டு நாள் மாநாட்டின் நோக்கமாகும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2333249&reg=3&lang=1

***

SK/PLM/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2333793) வருகையாளர் எண்ணிக்கை : 20
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Telugu