பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இந்திய கடற்படைக் கப்பல் தர்காஷ், மொரீஷியஸ் பயணத்தை நிறைவு செய்தது

இடுகை இடப்பட்ட நாள்: 05 NOV 2026 6:38PM by PIB Chennai

இந்திய கடற்படைக் கப்பலான ஐஎன்எஸ் தர்காஷ், 03 நவம்பர் 2026 அன்று மொரீஷியஸில் உள்ள போர்ட் லூயிஸ் துறைமுகத்தில், தமது கடல்சார் ஒத்துழைப்புப் பயணத்தை நிறைவு செய்தது.

கப்பலின் கட்டளை அதிகாரி, மொரீஷியஸின் உயர் அதிகாரிகளைச் ஆகியோரைச் சந்தித்தார். இந்தியர்கள் மொரீஷியஸ் சென்றதை நினைவுகூரும் வகையில் ஆப்ரவாசி தினம் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படுகிறது. 2026-ம் ஆண்டு ஆப்ரவாசி தின நிகழ்வில், மொரீஷியஸ் அரசின் கல்வி அமைச்சர் மாண்புமிகு டாக்டர் மகேந்த் குங்காபெர்சாத் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்ள, இந்திய கப்பலில் கலாச்சாரப் பரிமாற்ற நிகழ்வு நடைபெற்றது. 2026 நவம்பர் 02 அன்று நடைபெற்ற 192-வது ஆப்ரவாசி தினத்தை நினைவுகூரும் பல்வேறு நிகழ்வுகளிலும் இந்தியக் கப்பல் பங்கேற்றது.

இந்தியக் கப்பல் குழுவினர் மொரிஷியஸ் கடலோரக் காவல்படை வீரர்களுக்குக் பயிற்சி வழங்கியதுடன், சமூக சேவை நடவடிக்கையையும் மேற்கொண்டனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2333245&reg=3&lang=1

***

SK/PLM/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2333790) வருகையாளர் எண்ணிக்கை : 24
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Assamese