இடுகை இடப்பட்ட நாள்:
05 NOV 2026 7:43PM by PIB Chennai
மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையமான யுபிஎஸ்சி (UPSC), 2026 ஆகஸ்ட் 21 முதல் 30 வரை நடத்திய குடிமைப் பணிகள் முதன்மைத் தேர்வின் எழுத்துத் தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது. இதில் தேர்ச்சி பெற்றவர்கள், ஐஏஎஸ், ஐஎஃப்எஸ், ஐபிஎஸ், மத்திய அரசின் பிற குரூப் ஏ, குரூப் பி பணிகளுக்கான நேர்முகத் தேர்வில் பங்கேற்கத் தகுதி பெற்றுள்ளனர்.
இவர்களின் தகுதி இறுதியானதல்ல. வயது, கல்வித்தகுதி, இடஒதுக்கீட்டுச் சான்றுகள் உள்ளிட்ட அசல் ஆவணங்களை நேர்முகத் தேர்வின்போது சமர்ப்பிக்க வேண்டும்.
நேர்முகத் தேர்வு தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும். அழைப்புக் கடிதங்களை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம். அஞ்சல் மூலம் கடிதங்கள் அனுப்பப்படாது.
தேர்ச்சி பெற்றவர்கள், தேவையான விவரங்களை யுபிஎஸ்சி இணையதளத்தில் நவம்பர் 11 முதல் 25-ம் தேதி மாலை 6 மணிக்குள் புதுப்பித்துச் சமர்ப்பிக்க வேண்டும். தவறினால் நேர்முகத் தேர்வுக்கான அழைப்புக் கடிதம் வழங்கப்படாது.
மேலும், தகுதி பெற்ற அனைவரும் பணியாளர் நலத் துறையின் (DoPT) இணையதளத்தில் சுயவிவரச் சரிபார்ப்புப் படிவத்தை ஆன்லைனில் சமர்ப்பிக்க வேண்டும்.
இறுதி முடிவு வெளியான 15 நாட்களுக்குள் தேர்வர்களின் மதிப்பெண் பட்டியல் யுபிஎஸ்சி இணையதளத்தில் பதிவேற்றப்படும்.
மேலும் விவரங்களுக்கு இது ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2333275®=3&lang=1
***
SK/PLM/RJ