குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகம்
இடுகை இடப்பட்ட நாள்:
05 NOV 2026 8:34PM by PIB Chennai
பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்தின் கீழ் பதிவுசெய்யப்பட்ட தகுதியுள்ள பழங்குடியின கைவினைக் கலைஞர்களுக்குச் சந்தை வாய்ப்புகளை வலுப்படுத்துவதற்காக, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் (எம்எஸ்எம்இ) அமைச்சகம், பழங்குடியினர் விவகார அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்திய பழங்குடியினர் கூட்டுறவு சந்தை மேம்பாட்டுக் கூட்டமைப்புடன் (ட்ரைஃபெட்) ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இந்த ஒப்பந்தம், எம்எஸ்எம்இ அமைச்சகத்தின் கூடுதல் செயலாளரும், மேம்பாட்டு ஆணையருமான டாக்டர் ரஜ்னீஷ், ட்ரைஃபெட்-ன் நிர்வாக இயக்குநர் திரு எம். ராஜா முருகன், அமைச்சகத்தின் துணைத் தலைமை இயக்குநர் திரு நிதிஷ் குமார், இணை மேம்பாட்டு ஆணையர் திரு டேனிஷ் அஷ்ரஃப், ட்ரைஃபெட்-ன் நிர்வாக இயக்குநர் திரு பிரதீக் சிங் மீனா ஆகியோர் முன்னிலையில் கையெழுத்தானது.
இந்தக் கூட்டு முயற்சி, எம்எஸ்எம்இ அமைச்சகத்தின் பிரதமரின் விஸ்வகர்மா கட்டமைப்பு, ட்ரைஃபெட் அமைப்பால் நிறுவப்பட்ட ட்ரைப்ஸ் இந்தியா சந்தை மற்றும் சில்லறை விற்பனை வலையமைப்பு ஆகியவற்றை ஒன்றிணைக்கிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2333311®=3&lang=1
***
SK/BR/RJ