சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

சத்தீஸ்கர் மாணவரின் கல்விப் பயணத்தில் உறுதுணையாக இருந்து வரும் பட்டியலின வகுப்பு மாணவர்களுக்கான உதவித் தொகை திட்டம்

இடுகை இடப்பட்ட நாள்: 06 NOV 2026 3:15PM by PIB Chennai

மத்திய சமூக நீதி, அதிகாரமளித்தல் அமைச்சகத்தால் செயல்படுத்தப்பட்டு வரும் ஷெட்யூல்டு வகுப்பு மாணவர்களுக்கான தேசிய ஆராய்ச்சி உதவித் தொகை திட்டம், நலிவடைந்த பிரிவைச் சேர்ந்த மாணவர்கள் உயர்கல்வி பெறுவதற்கு உறுதுணையாக இருந்து வருகிறது. சத்தீஸ்கர் மாநிலம் ஜாஞ்ச்கிர்-சாம்பா மாவட்டத்தைச் சேர்ந்த 33 வயதான ராகுல் குமார் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற முனைவர் பட்ட ஆராய்ச்சியாளரின் கல்வி முன்னேற்றத்தில் இத்திட்டம் முக்கிய பங்காற்றியுள்ளது.

வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பத்தைச் சேர்ந்த இவர், போதிய பொருளாதார வசதி இல்லாமலும், பல்வேறு நிர்வாகச் சவால்களாலும் தனது ஆராய்ச்சிப் படிப்பை தொடர இயலவில்லை. இந்நிலையில், 2023 ஜூலை முதல் இவருக்கு தேசிய ஆராய்ச்சி உதவித் தொகை திட்டத்தின் கீழ், வீட்டு வாடகைப்படி உட்பட மாதம் ரூ.45,700 நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது.

இந்த உதவித்தொகை மூலம் நிதி நெருக்கடி இல்லாமல், தனது முனைவர் பட்ட ஆய்வை அர்ப்பணிப்புடன் மேற்கொள்ள முடிவதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2333562&reg=3&lang=1

***

SS/PD/SU


(வெளியீட்டு அடையாள எண்: 2333720) வருகையாளர் எண்ணிக்கை : 6
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी