பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இந்திய போர்க்கப்பல் திரிசூல், கிரீஸ் பயணத்தை நிறைவு செய்தது

இடுகை இடப்பட்ட நாள்: 06 NOV 2026 4:38PM by PIB Chennai

இந்தியக் கடற்படையின் ‘ஐஎன்எஸ் திரிசூல்’ போர்க்கப்பல், கிரீஸ் நாட்டின் சௌதா விரிகுடா துறைமுகப் பயணத்தை நவம்பர் 3-ம் தேதி நிறைவு செய்தது.

இந்தப் பயணத்தின்போது, கிரீஸ் கடற்படை உயர் அதிகாரிகள், நேட்டோ கடல்சார் பயிற்சி மையம், அமெரிக்கக் கடற்படைப் பிரிவு அதிகாரிகள் ஆகியோருடன் இந்தியக் கப்பல் அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். இரு நாட்டு கடற்படை வீரர்களும் கப்பல்களைப் பார்வையிட்டு, தொழில்நுட்பத் திறன்கள், செயல்பாடுகள் போன்றவை குறித்து அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர்.

கிரீஸ் நாட்டிற்கான இந்தியத் தூதர் ரவி சங்கர், போர்க்கப்பலைப் பார்வையிட்டு அதன் போர் திறன்கள் குறித்து கேட்டறிந்தார். மேலும், கப்பலில் நடைபெற்ற கலாசார நிகழ்ச்சியையும் அவர் பார்வையிட்டார்.

துறைமுகத்திலிருந்து புறப்பட்டபின், கிரீஸ் கடற்படையின் ‘எச்எஸ் லிம்னோஸ்’ போர்க்கப்பலுடன் இணைந்து கடல்சார் பயிற்சியில் ஐஎன்எஸ் திரிசூல் ஈடுபட்டது. இதில் கப்பலின் இயக்கம், தகவல் தொடர்பு, ஹெலிகாப்டர் தரையிறக்கம் உள்ளிட்ட பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்தப் பயணம் இந்தியா-கிரீஸ் நாடுகளுக்கு இடையிலான கடல்சார் ஒத்துழைப்பையும், இரு நாட்டு கடற்படைகளின் செயல்பாட்டுத் திறனையும் மேம்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து அடுத்தகட்டப் பணிக்காக ஐஎன்எஸ் திரிசூல் புறப்பட்டது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2333622&reg=3&lang=1  

***

TV/PLM/SU


(வெளியீட்டு அடையாள எண்: 2333707) வருகையாளர் எண்ணிக்கை : 11
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी