மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம்
இடுகை இடப்பட்ட நாள்:
06 NOV 2026 12:56PM by PIB Chennai
இந்தியாவில் கோமாரி நோய் சாட்-1 (SAT-1) வகை இதுவரை கண்டறியப்படாத நிலையில், அதன் பரவலைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பெங்களூருவில் 2026 நவம்பர் 4, 5 ஆகிய தேதிகளில் ‘வஜ்ரா-சாட்’ (VAJRA-SAT) என்ற இரண்டு நாள் தேசிய அளவிலான ஒத்திகைப் பயிற்சி நடைபெற்றது.
மத்திய கால்நடை பராமரிப்புந் துறை, ஐசிஏஆர்-கால்நடை நோய் தடுப்பு நிறுவனத்துடன் இணைந்து நடத்திய இப்பயிற்சியில், 25 மாநிலங்கள், 3 யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த 83 பேர் பங்கேற்றனர்.
நோயை முன்கூட்டியே கண்டறிதல், ஆய்வகப் பரிசோதனை மூலம் உறுதிப்படுத்துதல், நோய் பரவலைக் கட்டுப்படுத்துதல், தடுப்பூசித் தயார் நிலை, நோய்ப் பரவல் கண்காணிப்பு, மாநிலங்களுக்கு இடையிலான ஒருங்கிணைப்பு ஆகியவை குறித்து இதில் ஆலோசிக்கப்பட்டது.
மேலும், நோயைக் கண்டறியும் ஆய்வகங்களின் திறனை மேம்படுத்தவும், விரைவான நடவடிக்கைகளை உறுதிப்படுத்தவும் பரிந்துரைகள் வழங்கப்பட்டன.
இதனிடையே, நவம்பர் 5-ம் தேதி நடைபெற்ற தனிக் கூட்டத்தில், விந்தணு உற்பத்தி மையங்கள், சேமிப்பு வங்கிகளை கோமாரி நோயற்ற பகுதிகளாகப் பராமரிப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. இதன் மூலம் கால்நடை மரபணு வளங்களைப் பாதுகாப்பதுடன், பாதுகாப்பான கால்நடை வர்த்தகத்தை மேம்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2333487®=3&lang=1
....
TV/PLM/SU