தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தொழிலாளர் நலச் சட்டங்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி மத்தியப் பிரதேசத்தின் உஜ்ஜயினியில் நடைபெற்றது

இடுகை இடப்பட்ட நாள்: 06 NOV 2026 12:12PM by PIB Chennai

தொழிலாளர் நலச் சட்டங்கள், தொழிலாளர் நலன், சமூகப் பாதுகாப்பு குறித்த பிராந்திய அளவிலான திறன் மேம்பாடு & விழிப்புணர்வு நிகழ்ச்சி மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜயினியின் நாக்தாவில் 2026 நவம்பர் 4 அன்று நடைபெற்றது. மத்திய தொழிலாளர், வேலைவாய்ப்பு அமைச்சகம், மத்தியப் பிரதேச அரசு இணைந்து இந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தன.

தொழில்துறை தலைவர்கள், மனிதவள மேலாளர்கள், நிதித்துறை வல்லுநர்களிடையே தொழிலாளர் நலச் சட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு இந்நிகழ்ச்சி நடத்தப்பட்டது. மத்திய தொழிலாளர் நலத்துறை இயக்குநர் திரு எஸ் ஆர் தத்தா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் வருங்கால வைப்பு நிதி நிறுவனம், தொழிலாளர் அரசு ஈட்டுறுதிக் கழகம் ஆகியவற்றின் உயர் அதிகாரிகள், 150-க்கும் மேற்பட்ட தொழில் துறைப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

தொழிலாளர் நலச் சட்டங்களின் கீழ் நிறுவனங்களின் சட்டப்பூர்வக் கடமைகள், விதிகள், பல்வேறு சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள் குறித்து தொழில்நுட்ப அமர்வுகளில் விளக்கப்பட்டது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2333451&reg=3&lang=1

***

SS/PD/SU


(வெளியீட்டு அடையாள எண்: 2333668) வருகையாளர் எண்ணிக்கை : 3
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Gujarati