இடுகை இடப்பட்ட நாள்:
06 NOV 2026 12:00PM by PIB Chennai
ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத்தில் உள்ள தொழிலாளர் அரசு ஈட்டுறுதிக் கழக (இஎஸ்ஐசி) மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, அதன் சிறப்பு கண் மருத்துவ சிகிச்சைப் பிரிவில் குறிப்பிடத்தக்க சாதனையாக விழி வெண்படல மாற்று அறுவை சிகிச்சையை 2026 அக்டோபர் 27 அன்று வெற்றிகரமாக மேற்கொண்டது.
விழி வெண்படல ஒளிபுகாத் தன்மை காரணமாகப் பார்வைக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருந்த 46 வயது நோயாளிக்கு இந்த சிக்கலான அறுவை சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. கண் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் எஸ் ஆர் சிங் தலைமையிலான மருத்துவக் குழுவினர் இந்த அறுவை சிகிச்சையைச் சிறப்பாகச் செய்து முடித்தனர்.
இந்த சாதனையானது சிறப்பு மருத்துவச் சேவைகளை வலுப்படுத்துவதிலும், இஎஸ்ஐசி பயனாளிகளுக்கு மேம்பட்ட நவீன சுகாதார வசதிகளை வழங்குவதிலும் ஒரு முக்கிய முன்னேற்றமாகக் கருதப்படுகிறது. இந்த மைல்கல்லை எட்டிய கண் மருத்துவக் குழுவினரின் அர்ப்பணிப்புமிக்க சேவையை மருத்துவமனை நிர்வாகம் பாராட்டியுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2333448®=3&lang=1
***
SS/PD/SU