மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம்
இடுகை இடப்பட்ட நாள்:
06 NOV 2026 7:17AM by PIB Chennai
பன்றிகள் வளர்ப்பில் அறிவியல் பூர்வமான இனப்பெருக்கத்தை ஊக்குவித்தல், மரபணு மேம்பாட்டை விரைவுபடுத்துதல், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்துதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட புதிய வழிகாட்டு நெறிமுறைகள் கையேட்டை மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு, பால்வளத்துறை அமைச்சர் திரு ராஜீவ் ரஞ்சன் சிங் 2026 நவம்பர் 2 அன்று சிக்கிமில் வெளியிட்டார். வடகிழக்கு பிராந்தியத்தில் பன்றி வளர்ப்பு நடைமுறைகளை நவீனமயமாக்க இந்த முன்னெடுப்பு பெரிதும் உதவும்.
20-வது கால்நடை கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் 90.6 லட்சம் பன்றிகள் உள்ளன. இதில் கிட்டத்தட்ட 45 சதவீத பன்றிகள் வடகிழக்கு மாநிலங்களில் வளர்க்கப்படுகின்றன. பன்றிகள் வளர்ப்பில் தரமான மரபணுப் பொருட்கள், நவீன தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படுவதை உறுதி செய்வதன் மூலம் உற்பத்தித் திறனையும், இறைச்சி உற்பத்தியையும் அதிகரிக்க இந்த நெறிமுறைகள் வகை செய்கின்றன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2333399®=3&lang=1
***
SS/PD/SU