இடுகை இடப்பட்ட நாள்:
06 NOV 2026 1:24PM by PIB Chennai
வேளாண் ஆராய்ச்சி, கல்வித் துறையான டிஏஆர்இ-யும் (DARE) இந்திய வேளாண் ஆராய்ச்சிக் குழுமமான ஐசிஏஆர்-ம் (ICAR), நாடு முழுவதும் உள்ள தங்களது அலுவலங்களில் சிறப்புத் தூய்மை இயக்கம் 6.0-ஐ நிறைவு செய்துள்ளன. இந்த இயக்கத்தின் போது, டிஏஆர்இ–ஐசிஏஆர்-ன் அனைத்துக் கிளைகளிலும் உள்ள சுமார் 8,000 இடங்கள் தூய்மைப்படுத்தப்பட்டன.
இந்த நடவடிக்கைகளில் ஆவண மேலாண்மை, டிஜிட்டல் மயமாக்கல், மரக் கன்றுகள் நடுதல், சுற்றுச்சூழலுக்கு உகந்த நடைமுறைகள், மக்களை மையமாகக் கொண்ட நடைமுறைகள், பழைய பொருட்களை அகற்றுதல், மின்னணுக் கழிவு மேலாண்மை, அலுவலக இடங்களை மேம்படுத்துதல் ஆகியவை அடங்கும். இந்த இயக்கம் ரூ. 14 லட்சத்திற்கும் அதிகமான வருவாயை ஈட்டியதுடன், 4,000 சதுர அடிக்கும் அதிகமான இடத்தையும் விடுவித்து பயன்பாட்டுக்கு வந்துள்ளது.
பல வளாகங்களில் இலவச மருத்துவ முகாம்களும் ஏற்பாடு செய்யப்பட்டன. தூய்மைப் பணியாளர்களைப் பாராட்டும் நடைமுறையும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
அனைத்து நிலைகளிலுமுள்ள அதிகாரிகள், அலுவலக வளாகங்களுக்கு உள்ளேயும், வளாகங்களைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் மேற்கொள்ளப்பட்ட தூய்மைப் பணிகளில் தீவிரமாகப் பங்கேற்றனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2333505®=3&lang=1
***
TV/PLM/SU