தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
இடுகை இடப்பட்ட நாள்:
05 NOV 2026 5:09PM by PIB Chennai
மும்பை பகுதியில் தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்கள் வழங்கும் குரல் அழைப்புகள், இணையத் தரவு சேவைகளின் நிகழ்நேரத் தரத்தை ஆய்வு செய்து இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) அறிக்கை வெளியிட்டுள்ளது. நுகர்வோரின் தகவல் பயன்பாட்டிற்காகவும், சேவை நிறுவனங்களின் செயல்பாடுகளை ஊக்குவிக்கவும் இந்த களப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
பெங்களூரு மண்டல அலுவலகத்தின் மேற்பார்வையில், 2026 செப்டம்பர் 23 முதல் 25 வரை மும்பையில் 212.6 கிலோமீட்டர் தூரமும், 7 முக்கிய இடங்களும் பரிசோதிக்கப்பட்டன. ஏர்டெல், எம்டிஎன்எல், ஜியோ, வோடபோன் ஐடியா ஆகிய நிறுவனங்களின் 2G, 3G, 4G, 5G நெட்வொர்க்குகளில் அதிநவீன கருவிகள் மூலம் குரல் அழைப்பு சேவை விகிதம், அழைப்புத் துண்டிப்பு, இணையப் பதிவிறக்கம், பதிவேற்ற வேகம் உள்ளிட்ட முக்கிய அளவீடுகள் பகுப்பாய்வு செய்யப்பட்டன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2333152®=3&lang=1&_gl=1
****
SK/PD/SH