இடுகை இடப்பட்ட நாள்:
05 NOV 2026 3:38PM by PIB Chennai
தூய்மைப் பணிகளை ஊக்குவித்தல், நிர்வாகத் திறனை உயர்த்துதல், நிலுவையில் உள்ள கோப்புகளுக்கு விரைந்து தீர்வு காணுதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு மத்திய ஜவுளி அமைச்சகத்தால் தூய்மைக்கான சிறப்பு இயக்கம் 6.0-ன் கீழ் 2026 அக்டோபர் 2 முதல் 31 வரை தூய்மை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அமைச்சகத்தின் கீழ் இயங்கும் அனைத்துத் துறை அலுவலகங்கள், தன்னாட்சி அமைப்புகள், பொதுத்துறை நிறுவனங்கள் இந்த சிறப்பு பிரச்சாரத்தில் தீவிரமாகப் பங்கேற்றன.
இப்பிரச்சாரத்தின் கீழ் கழிவுப் பொருட்களை அகற்றியதன் மூலம் ரூ.10,15,814 வருவாய் ஈட்டப்பட்டதுடன், 44,025 சதுர அடி அலுவலக இடம் பயன்பாட்டிற்குக் கொண்டுவரப்பட்டது. மறுஆய்வு செய்யப்பட்ட 20,950 காகிதக் கோப்புகளில் 8,080 பயன்பாடற்ற கோப்புகள் அகற்றப்பட்டன. மேலும் 242 இடங்களில் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டதுடன், பொதுமக்களின் குறைகளுக்கு 100 சதவீதத் தீர்வு காணப்பட்டது. மின்னணுக் கழிவு மேலாண்மை வாயிலாக இதுவரை ரூ.3,62,096 வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.
மரக்கன்றுகள் நடுதல், சைபர் பாதுகாப்பு விழிப்புணர்வுப் பயிலரங்குகள் போன்ற பல்வேறு ஆக்கப்பூர்வமான செயல்பாடுகள் இதன் ஒரு பகுதியாக மேற்கொள்ளப்பட்டன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2333058®=3&lang=1
****
SK/PD/SH