அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
azadi ka amrit mahotsav

யுபிசி 63 என்ற நட்சத்திரக் கூட்டம், இரண்டு தனித்தனி குழுக்கள் - இந்திய விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

இடுகை இடப்பட்ட நாள்: 05 NOV 2026 5:38PM by PIB Chennai

பூமியிலிருந்து சுமார் 4,892 ஒளியாண்டுகள் தொலைவில் உள்ள யுபிசி 63 என்ற நட்சத்திரக் கூட்டம், ஒரே கூட்டம் அல்ல எனவும் இரண்டு தனித்தனி குழுக்கள் எனவும் இந்திய விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

ஐரோப்பிய விண்வெளி அமைப்பின் கயா விண்கலத் தரவுகளைப் பயன்படுத்தி, குவஹாத்தி பல்கலைக்கழகம், இந்திய வானியற்பியல் நிறுவனம் ஆகியவற்றின் ஆய்வாளர்கள் இந்தக் கண்டுபிடிப்பைச் செய்துள்ளனர்.

செயற்கை நுண்ணறிவு சார்ந்த இயந்திரக் கற்றல், கணினி உருவகப்படுத்துதல் மூலம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, இது உறுதிப்படுத்தப்பட்டது. இந்த இரண்டு கூட்டங்களுக்கும் யுபிசி 63ஏ, யுபிசி 63பி என பெயரிடப்பட்டுள்ளது.

இவை தற்போது சுமார் 85 ஒளியாண்டுகள் இடைவெளியில் உள்ளன. இவை ஈர்ப்பு விசையால் பிணைக்கப்பட்டவை அல்ல.

இந்திய ஆய்வாளர்களின் இந்தக் இக்கண்டுபிடிப்பானது, நட்சத்திரக் கூட்டங்களின் தோற்றம், இயக்கம், பரிணாம வளர்ச்சி ஆகியவற்றைப் புரிந்துகொள்ள உதவுகிறது. இந்த ஆய்வு ஆஸ்ட்ரானமிக்கல் ஜர்னல் (Astronomical Journal) இதழில் வெளியாகியுள்ளது.

வெளியீட்டு இணைப்பு: https://iopscience.iop.org/article/10.3847/1538-3881/ae8c38

மேலும் விபரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2333191&reg=3&lang=1

(Release ID: 2333191)

****

SK/PLM/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2333273) வருகையாளர் எண்ணிக்கை : 17
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी