புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம்
இடுகை இடப்பட்ட நாள்:
05 NOV 2026 3:45PM by PIB Chennai
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் இந்தியா அடைந்துள்ள வளர்ச்சி என்பது சுற்றுச்சூழல் தொடர்பான உறுதிப்பாடுகள், பொருளாதார வளர்ச்சிக்கு தடையாக இருப்பதில்லை என்பதை உணர்த்துவதாகவும் அவை நாட்டின் வளர்ச்சிப் பயணத்திற்கு ஊக்கமளிக்கும் காரணியாக செயல்படுவதாகவும் குடியரசுத் துணைத்தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
புதுதில்லியில் உள்ள பாரத மண்டபத்தில் நடைபெற்ற இந்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உச்சிமாநாடு மற்றும் கண்காட்சி 2026-ன் நிறைவு நாள் அமர்வில் உரையாற்றியபோது அவர் இதனைத் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய மத்திய புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்திதுறை அமைச்சர் திரு பிரல்ஹாத் ஜோஷி, கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் 15 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இதில் கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் சுமார் 6 லட்சம் கோடி ரூபாய் முதலீடு இத்துறைக்கு கிடைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உச்சிமாநாடு மற்றும் கண்காட்சி 2026 இந்தியாவின் மிகப்பெரிய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி நிகழ்வாகும் என்று குறிப்பிட்ட திரு ஜோஷி, இதில் 8 நட்புறவு நாடுகள் மற்றும் ஐரோப்பிய யூனியன் பிரதிநிதிகள், 32-க்கும் மேற்பட்ட சர்வதேச நாடுகளின் அமைச்சர்கள், 135 நாடுகளைச் சேர்ந்த 75,000-க்கும் அதிகமான பார்வையாளர்கள் பங்கேற்றதாகக் கூறினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்:https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2333061®=3&lang=1&_gl=1
***
AD/IR/PS/SH