இடுகை இடப்பட்ட நாள்:
03 NOV 2026 6:05PM by PIB Chennai
இந்திய விமானப்படையும் கடற்படையும் இணைந்து, 2026 நவம்பர் 1, 2 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட இரவில், அரபிக் கடலில் மும்பையிலிருந்து சுமார் 3000 கிலோமீட்டர் தொலைவில், கடற்கொள்ளையர்களுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு ஆதரவாக, நீண்ட தூர கடல்சார் வான்வழி தரையிறக்க செயல்பாட்டை வெற்றிகரமாக மேற்கொண்டன. சவாலான சூழ்நிலைகள் இருந்தபோதிலும், சி-17 விமானக் குழுவினர் வானிலிருந்து பொருட்களை வெற்றிகரமாக இறக்கினர். இதன்மூலம், மார்கோஸ் குழுவினர் மேலதிக நடவடிக்கைகளுக்காகப் பாதுகாப்பாக ஈடுபடுத்தப்பட்டனர்.
இந்திய விமானப்படையின் சி-17 குளோப்மாஸ்டர் III ரக விமானம், சிறப்பு உபகரணங்களையும், மார்கோஸ் வீரர்களையும் வான்வழியாகக் கொண்டு சேர்ப்பதற்காகக் குறுகிய கால அவகாசத்தில் பணியில் ஈடுபடுத்தப்பட்டது. இந்த வெற்றிகரமான நடவடிக்கை, இந்திய விமானப்படைக்கும் கடற்படைக்கும் இடையிலான மிகச்சிறந்த ஒருங்கிணைப்பை எடுத்துரைக்கிறது. அத்துடன், இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் கடல்சார் பாதுகாப்பு, கப்பல் போக்குவரத்திற்கான சுதந்திரம், சர்வதேச கப்பல் போக்குவரத்தின் பாதுகாப்பு முதலியவற்றில் இந்தியா கொண்டுள்ள தொடர்ச்சியான அர்ப்பணிப்பை இந்தச் செயல்பாடு உறுதிப்படுத்துகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்:https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2332387®=3&lang=1
***
AD/BR/RJ