தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
இடுகை இடப்பட்ட நாள்:
05 NOV 2026 1:28PM by PIB Chennai
இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் சார்பில், அரியானா மாநிலம், நூஹ், பல்வால் ஆகிய நகரங்கள், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் செல்போன் நெட்வொர்க் சேவையின் தரம் குறித்து 2026 ஜூலை மாதம் சோதனை நடத்தப்பட்டது. குரலின் தரம், செல்போன்களுக்கான சிக்னல், இணைப்பு துண்டிப்பு, வெற்றிகரமான அழைப்புகள், தரவு பதிவிறக்கம் போன்றவை குறித்தும் சோதனை நடத்தப்பட்டது. நகரின் முக்கிய பகுதிகள், ரயில், பேருந்து நிலையங்கள், வழிபாட்டு தலங்கள் என மக்கள் கூடும் இடங்களில் இந்த சோதனை நடைபெற்றது. 2ஜி, 3ஜி, 4ஜி, 5ஜி நெட்வொர்க்கின் தரம் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பிஎஸ்என்எல், ஏர்டெல் உள்ளிட்ட தொலைதொடர்பு நிறுவனங்களால், வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் செல்போன் நெட்வொர்க் சேவையை மேம்படுத்தும் நோக்கத்திலும், வாடிக்கையாளர்கள் பயன்பெறும் வகையிலும் இந்த சோதனை நடத்தப்பட்டதாக இந்திய தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது.
சேவையில் உள்ள நிறைகுறைகள், சம்மந்தப்பட்ட நிறுவனங்களின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விபரங்களை இந்திய தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் இணையதளம் மூலம் அறிந்துகொள்ளலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2332944®=3&lang=1
***
AD/LN/RJ