புவி அறிவியல் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

உள்நாட்டுத் திறன்கள், சர்வதேச ஒத்துழைப்பு மூலம் உலகளாவிய போட்டித்தன்மையை இந்தியா இலக்காகக் கொள்கிறது: மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்

இடுகை இடப்பட்ட நாள்: 04 NOV 2026 5:31PM by PIB Chennai

இந்தோ-பசிபிக் பிராந்திய உரையாடல் 2026 நிகழ்வில் உரையாற்றிய மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், புவி அறிவியல் அமைச்சகத்தின் இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) டாக்டர் ஜிதேந்திர சிங், இந்தியா தனது சொந்தத் திறன்கள், சர்வதேச ஒத்துழைப்பு, உலகளாவிய கூட்டு உருவாக்கம் ஆகியவற்றின் மூலம் கடல்சார் ஆராய்ச்சியிலும் ஆய்விலும் உலகளாவிய போட்டித்தன்மையை அடைய இலக்கு நிர்ணயித்துள்ளது என்று தெரிவித்தார்.

ஆழ்கடல் ஆய்வில் இந்தியாவின் உள்நாட்டுத் திறன்களை எடுத்துரைத்த அமைச்சர், சென்னையில் உள்ள தேசிய கடல்சார் தொழில்நுட்ப நிறுவனம்,  மத்திய இந்தியப் பெருங்கடல் பகுதியில் 5,000 முதல் 6,000 மீட்டர் ஆழத்தில் சோதனைகளை மேற்கொள்ளும் திறனை வளர்த்துள்ளதாகத் தெரிவித்தார். ஆழ் கடல் ஆய்வையும், விண்வெளி ஆய்வையும் ஒன்றிணைக்கும் ஒரு குறிப்பிடத்தக்க முயற்சியில் நாடு ஈடுபட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

ஒரு இந்தியர் சுமார் 6,000 மீட்டர் ஆழமுள்ள கடலுக்குள் பயணம் மேற்கொள்ளும் அதே வேளையில், மற்றொரு இந்தியர் விண்வெளிக்குச் செல்லும் சூழலை உருவாக்குவதே தங்களின் தொலைநோக்குப் பார்வை என்றும்,  இது நாட்டின் வளர்ந்து வரும் அறிவியல், தொழில்நுட்பத் திறன்களைப் பறைசாற்றுகிறது என்றும்  அவர் குறிப்பிட்டார். கூட்டு அறிவியல் பயணங்கள், ஆராய்ச்சி வசதிகளைப் பரஸ்பரம் பயன்படுத்திக் கொள்ளுதல், தரவுகளைப் பகிர்ந்து கொள்ளுதல் ஆகியவற்றின் அடிப்படையில் உலகளாவிய உத்திகளையும் கூட்டணிகளையும் உருவாக்க வேண்டும் என்று அமைச்சர் வலியுறுத்தினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2332636&reg=3&lang=1&_gl=1

***

SK/RB/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2332963) வருகையாளர் எண்ணிக்கை : 13
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Telugu