பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
இடுகை இடப்பட்ட நாள்:
04 NOV 2026 4:13PM by PIB Chennai
ஓய்வூதியதாரர்களுக்கான டிஜிட்டல் வசதிகள் குறித்த விழிப்புணர்வு முகாம், பிரயாக்ராஜ் ரயில்வே கோட்டத்தில் இன்று நடைபெற்றது.
நாடு முழுவதும் டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ் உள்ளிட்ட பல்வேறு டிஜிட்டல் வசதிகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், பிரயாக்ராஜில் உள்ள கோட்ட ரயில்வே மேலாளர் அலுவலகத்தில், வடக்கு மத்திய ரயில்வே, பிரயாக்ராஜ் கோட்டம், பாரத ஸ்டேட் வங்கியுடன் இணைந்து ஏற்பாடு செய்திருந்த இந்த முகாமில், மத்திய ஓய்வூதியம், ஓய்வூதியதாரர்கள் நலத்துறை இன்று பங்கேற்றது.
மத்திய ஓய்வூதியம், ஓய்வூதியதாரர்கள் நலத்துறை செயலாளர் திரு துருபஜோதி சென்குப்தா, ஓய்வூதியதாரர்கள், அதிகாரிகளுடன் கலந்துரையாடினார். மேலும், தங்களின் டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ்களைச் சமர்ப்பிக்க முக அங்கீகாரத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, நாடு தழுவிய டிஎல்சி பிரச்சாரம் 5-ல் முனைப்புடன் பங்கேற்குமாறு ஓய்வூதியதாரர்களை அவர் ஊக்குவித்தார்.
மூத்த குடிமக்களின் எளிதான வாழ்க்கையை உறுதி செய்வதில், டிஜிட்டல் அடிப்படையிலான நடைமுறைகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய திரு சென்குப்தா, முக அங்கீகாரத் தொழில்நுட்பம், ஓய்வூதியதாரர்கள் தங்கள் ஸ்மார்ட்போன்கள் மூலம் எளிதாக ஆயுள் சான்றிதழ்களை உருவாக்க உதவுகிறது என்றும், இதன் மூலம் வங்கிகள் மற்றும் பிற அலுவலகங்களுக்கு மீண்டும் மீண்டும் செல்ல வேண்டிய தேவையை நீக்குகிறது என்றும் எடுத்துரைத்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2332523®=3&lang=1&_gl=1
***
SK/SV/RJ