சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
இடுகை இடப்பட்ட நாள்:
04 NOV 2026 6:59PM by PIB Chennai
புது தில்லியின் ஐஎன்ஏ பகுதியில் உள்ள தில்லி ஹாட்டில் தற்போது நடைபெற்று வரும் கைவினைப் பொருட்களின் கண்காட்சி, இந்தியாவின் கலை மரபுகள், உள்நாட்டு கைவினைத் திறன், கலாச்சார பன்முகத்தன்மையை வெளிப்படுத்தும் விதமாக, ஏராளமான பார்வையாளர்களை ஈர்த்து வருகிறது.
மத்திய சமூக நீதி, அதிகாரமளித்தல் அமைச்சகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த 15 நாள் கண்காட்சி, அனைவரையும் உள்ளடக்கிய ஒரு கொண்டாட்ட மையமாகத் திகழ்கிறது. இது நவம்பர் 15, 2026 வரை பார்வையாளர்களுக்காகத் திறந்திருக்கும்.
ஒளி மற்றும் பாரம்பரியம் – ஒளியிலிருந்து ஒளியேற்றுவோம் என்ற கருப்பொருளை மையமாகக் கொண்ட இந்தக் கண்காட்சி, இந்தியாவின் பாரம்பரிய கைவினைப் பொருட்கள் மற்றும் பண்டிகைக்கால விளக்கு அலங்காரங்களின் வளமான பாரம்பரியத்தை எடுத்துரைக்கிறது. பார்வையாளர்களுக்கு ஒரு முழுமையான கலாச்சார அனுபவத்தை வழங்கும் வகையில், இந்த கண்காட்சி ஏழு தனித்துவமான கருப்பொருள் மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2332718®=3&lang=1
***
SK/SV/RJ