இடுகை இடப்பட்ட நாள்:
04 NOV 2026 7:05PM by PIB Chennai
அமெரிக்காவின் சஃபயர் நிறுவனம், ஜென்டாரி ரினியூவபிள்ஸ் இந்தியா நிறுவனத்தின் சில பங்குகளை வாங்குவதற்கு இந்திய வணிகப் போட்டி ஆணையம் (சிசிஐ) ஒப்புதல் அளித்துள்ளது.
சஃபயர் நிறுவனம், ஜென்டாரி ரினியூவபிள்ஸ் இந்தியா நிறுவனத்தின் சில பங்குகளை வாங்குவது தொடர்பான இந்த முன்மொழியப்பட்ட வணிக இணைப்பிற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
சஃபயர் நிறுவனம், முன்மொழியப்பட்ட பரிவர்த்தனைக்காக மட்டுமே பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட ஒரு சிறப்பு நோக்க நிறுவனமாகும் கையகப்படுத்தப்படவுள்ள ஜென்டாரி ரினியூவபிள்ஸ் நிறுவனம், இந்தியாவில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்கள் மூலம் மின்சார உற்பத்தி, மின்கலன் எரிசக்தி சேமிப்புத் தீர்வுகள் வழங்கும் துறையில் ஈடுபட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2332720®=3&lang=1
***
SK/RB/RJ